குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவரை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79-வது அமர்வின் தலைவர் சந்தித்தார்
Posted On:
06 FEB 2025 3:39PM by PIB Chennai
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79-வது அமர்வின் தலைவர் திரு பிலிமோன் யாங், இன்று (பிப்ரவரி 6, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அமர்வுத் தலைவரை இந்தியாவிற்கு வரவேற்ற குடியரசுத் தலைவர், ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட 80 ஆண்டுகள் என்னும் முக்கியமான மைல்கல்லை நாம் எட்டும் நேரத்தில், ஐ.நா. பொதுச் சபையின் தலைமைப் பதவியை அவர் வகிப்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.
2025-ம் ஆண்டில் வளர்ச்சிக்கான நிதியுதவி குறித்த நான்காவது மாநாடு மற்றும் மூன்றாவது ஐ.நா. பெருங்கடல் மாநாடு போன்ற முக்கியமான ஐ.நா. மாநாடுகள் நடக்க இருப்பதைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இந்த அனைத்து தளங்களிலும் இந்தியா ஆக்கபூர்வமாகப் பங்கேற்கும் எனக் குடியரசுத் தலைவர் உறுதியளித்தார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட முக்கிய பலதரப்பு அமைப்புகளை, சமகால உலகளாவிய யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில், ஆரம்ப மற்றும் விரிவான முறையில் சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தைகா குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.
நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தரவு சார்ந்த அணுகுமுறை மற்றும் அவரது உள்ளடக்கிய தொலைநோக்குப் பார்வையில் திரு பிலிமோன் யாங்கின் முக்கியத்துவத்தையும் குடியரசுத்தலைவர் பாராட்டினார். 2024 செப்டம்பரில் நியூயார்க்கில் நடைபெற்ற எதிர்காலத்திற்கான உச்சிமாநாட்டில் "எதிர்காலத்திற்கான ஒப்பந்தம்" ஏற்றுக்கொள்ளப்பட்டதில் அவரது தலைமையையும் அவர் பாராட்டினார். "வசுதைவ குடும்பகம்" என்ற தத்துவத்தால் வழிநடத்தப்படும் ஐ.நா. உட்பட, உலகளாவிய தெற்கின் நோக்கங்களை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்று அவர் கூறினார்.
இந்தியாவிற்கும், கேமரூனுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நட்புரீதியான இருதரப்பு உறவுகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். அவை பல ஆண்டுகளாக, குறிப்பாக வளர்ச்சி, கூட்டாண்மை மற்றும் திறன் மேம்பாட்டில் சீராக வளர்ந்துள்ளன. இந்தியா ஆப்பிரிக்காவுடன் ஒரு சிறப்பு பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறது என்றும், 2023-ல் இந்தியாவின் தலைமையின் போதுதான் ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி-20 இல் நிரந்தர உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
***
(Release ID: 2100255)
TS/PKV/AG/RR
(Release ID: 2100329)
Visitor Counter : 47