பிரதமர் அலுவலகம்
மேன்மைமிக்க இளவரசர் நான்காம் கரீம் ஆகா கான் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
05 FEB 2025 4:10PM by PIB Chennai
மேன்மைமிக்க இளவரசர் நான்காம் கரீம் ஆகா கான் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். சேவை, ஆன்மீகத்திற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு தொலைநோக்குப் பார்வையாளர் அவர் என்று பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார். சுகாதாரம், கல்வி, கிராமப்புற மேம்பாடு, பெண்கள் அதிகாரமளித்தல் போன்ற துறைகளில் அவரது பங்களிப்புகளைப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
மேன்மைமிக்க இளவரசர் நான்காம் கரீம் ஆகா கான் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன். சேவை, ஆன்மீகத்திற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு தொலைநோக்குப் பார்வையாளராக அவர் திகழ்ந்தார். சுகாதாரம், கல்வி, கிராமப்புற மேம்பாடு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற துறைகளில் அவரது பங்களிப்புகள் தொடர்ந்து பலருக்கு ஊக்கமளிக்கும். அவருடனான எனது தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். அவரது குடும்பத்தினருக்கும், உலகம் முழுவதும் அவரைப் பின்பற்றும் லட்சக்கணக்கானோருக்கும், பற்றுக்கொண்டவர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
***
(Release ID: 2100011)
TS/IR/RJ/KR
(रिलीज़ आईडी: 2100039)
आगंतुक पटल : 59
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam