உள்துறை அமைச்சகம்
தேசிய புயல் ஆபத்துக் குறைப்புத் திட்டம்
Posted On:
04 FEB 2025 2:43PM by PIB Chennai
தேசிய புயல் ஆபத்துக் குறைப்புத் திட்டம் 8 கடலோர மாநிலங்களில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. முதல் கட்டத்தில் ஆந்திரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களிலும், இரண்டாம் கட்டத்தில் கோவா, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதன் கீழ் வழங்கப்பட்ட மொத்த நிதி ரூ. 3380.61 கோடியாகும். முதல் கட்டத்தில் ரூ. 1957.76 நிதியும் இரண்டாம் கட்டத்தில் ரூழ 1422.85 கோடி நிதியும் விடுவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை பராமரித்தல், நிலைத்திருக்கச் செய்யும் பொறுப்பு ஆகியவை மாநில அரசுகளிடம் உள்ளது. தேசிய புயல் ஆபத்துக் குறைப்புத் திட்டத்தின் கீழ், பல்நோக்கு புயல் பாதுகாப்பு முகாம்களின் செயல்பாட்டு நிலைத்தன்மைக்காக பதிவு செய்யப்பட்ட சங்கமாக புயல் பாதுகாப்பு மேலாண்மை குழுக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீண்ட கால பராமரிப்புக்காக மாநில பட்ஜெட்டில் நிதியை ஒதுக்கவும் மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
-----
TS/PLM/KPG/KR/DL
(Release ID: 2099851)
Visitor Counter : 28