வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சென்னையில் நடைபெறும் வடகிழக்குப் பிராந்திய கண்காட்சிக்கான முன்னோட்ட நிகழ்வு

Posted On: 04 FEB 2025 11:35AM by PIB Chennai

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம், 2025 பிப்ரவரி 5, அன்று சென்னை கிண்டியில் உள்ள ஹோட்டல் ஹில்டனில் பிற்பகல் 3:30 மணிக்கு வடகிழக்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டு கண்காட்சியை நடத்துகிறது. இதை வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா தொடங்கி வைக்கிறார். இந்த அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சல் குமார், இணைச் செயலாளர் திரு சாந்தனு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், பல்வேறு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த உயர் பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கண்காட்சியில் வர்த்தகர்கள், அரசு பிரதிநிதிகள் இடையேயான கூட்டங்கள் இடம்பெறும். இது சாத்தியமான முதலீட்டாளர்கள் மாநில பிரதிநிதிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவும் வடகிழக்குப் பிராந்தியத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. இந்த நிகழ்வு வடகிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த மாநில அரசுகள், ஃபிக்கி, இன்வெஸ்ட் இந்தியா (முதலீட்டுக்கு வழிவகுக்கும் கூட்டாளர்) ஆகியவை ஒருங்கிணைந்து இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய எட்டு வடகிழக்கு மாநிலங்களின் காட்சிப்படுத்தலை எடுத்துரைக்கும் வகையில் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள முதலீட்டு கண்காட்சி தொடரின் 8-வது நிகழ்வாக சென்னை கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த மாநிலங்கள் வேளாண்மை, உணவு பதனப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவைகள், பொழுதுபோக்கு, விளையாட்டு, எரிசக்தி, உள்கட்டமைப்பு, தளவாடங்கள், சுற்றுலா, விருந்தோம்பல், கல்வி, திறன் மேம்பாடு, சுகாதாரம், ஜவுளி, கைத்தறி, கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பல்வேறு வகையான முதலீட்டு வாய்ப்புகளை எடுத்துக்காட்டும்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099415

***

(Release ID: 2099415)
TS/IR/RR/KR


(Release ID: 2099450) Visitor Counter : 67