பிரதமர் அலுவலகம்
உடல் பருமனை தடுக்கவும், எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கவும் பிரதமர் விடுத்த அழைப்புக்கு மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்
நடிகர் அக்ஷய் குமார் பிரதமரின் அழைப்பைப் பாராட்டி ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிரிவு சீரான ஊட்டச்சத்து உணவுக்கான பிரதமரின் அழைப்பை பாராட்டியுள்ளது
நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள் உடல் பருமனுக்கு எதிரான பிரதமரின் அழைப்பை வரவேற்றுள்ளனர்
Posted On:
31 JAN 2025 6:25PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில் உடல் பருமனை எதிர்த்துப் போராடவும் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கவும் ஒரு தெளிவான அழைப்பை விடுத்திருந்தார். இதற்கு மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்களிடமிருந்து பரவலான ஆதரவு கிடைத்துள்ளது.
டேராடூனில் நடைபெற்று வரும் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர், நாட்டில் உடல் பருமன் பிரச்சினை எவ்வாறு வேகமாக அதிகரித்து வருகிறது என்பது குறித்து எடுத்துரைத்தார். இது கவலைக்குரிய விஷயம் எனவும், இது உடல் பருமன் நீரிழிவு, இதய நோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியிருந்தார். உடல் திறன் இந்தியா இயக்கம் பற்றிப் பேசுகையில், சமச்சீரான உணவில் கவனம் செலுத்துவதுடன் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார். உணவில் ஆரோக்கியமற்ற கொழுப்பு, எண்ணெய் பொருட்கள் ஆகியவற்றைக் குறைப்பதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டினார். மேலும் தினசரி எண்ணெய் பயன்பாட்டை 10% குறைக்க வேண்டும் என்ற புதிய ஆலோசனையையும் அவர் வழங்கினார்.
நடிகர் அக்ஷய் குமார் பிரதமரின் ஆலோசனையைப் பாராட்டி, நல்ல ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.
பிரதமரின் தெளிவான அழைப்பை ஆதரிக்கும் வகையில், சுகாதார துறையினர் கருத்துகளை தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிரிவு, சீரான சத்தான உணவுக்கான பிரதமரின் அழைப்பை பாராட்டியுள்ளது.
பி.டி. இந்துஜா மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி கௌதம் கன்னா, உடல் பருமனைக் குறைப்பதன் முக்கியத்துவம் குறித்தும், அதனுடன் தொடர்புடைய ஆபத்துகள் குறித்தும் சரியான நேரத்தில் பிரதமர் எடுத்துரைத்திருப்பதாக கூறியுள்ளார்.
மகாஜன் இமேஜிங் அண்ட் லேப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஹர்ஷ் மகாஜன், உடல் பருமனுக்கு எதிராகப் போராட பிரதமர் விடுத்த அழைப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
உஜாலா சிக்னஸ் ஹெல்த்கேர் சர்வீசஸ் நிறுவனத்தின் நிறுவன இயக்குனர் டாக்டர் சுச்சின் பஜாஜ், உடல் பருமன் தீவிரமான சவால் என்றும், இதனை உடனடியாகவும், ஒன்றாக இணைந்தும் எதித்து போராட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பல்வேறு மருத்துவர்களும் உடல் பருமன் அச்சுறுத்தலைச் தடுப்பதன் முக்கியத்துவத்தை ஆதரித்து கருத்துகளை தெரிவித்துள்னர்.
இந்திய பல் மருத்துவ சங்கம், டாடா மெமோரியல் மருத்துவமனை, தில்லி நாளமில்லா சுரப்பிகள் சங்கம் உள்ளிட்ட பல மருத்துவமனைகள், மருத்துவ அமைப்புகள், சங்கங்கள் போன்றவை உடல் பருமனுக்கு எதிரான இயக்கத்திற்கு ஆதரவளித்துள்ளன.
பிரதமர் விடுத்த அழைப்பை விளையாட்டு வீரர்களும் ஆதரித்துள்ளனர். சமச்சீர் உணவு, உடற்பயிற்சி, ஆரோக்கியம் ஆகியவை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிய இயக்கம் பாராட்டுக்குரியது என்று குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கூறியுள்ளார்.
உடற்பயிற்சி பயிற்சியாளர் மிக்கி மேத்தா, உலக சாம்பியன்ஷிப் போட்டியின் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் கௌரவ் பிதுரி ஆகியோரும் பிரதமரின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளர்.
***
TS/PLM/RJ/DL
(Release ID: 2098191)
Visitor Counter : 10