நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிதியாண்டு 2016-க்கும், 2021-க்கும் இடையே பாசனப் பகுதியின் பரப்பளவு 49.3 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதிகரித்துள்ளது: பொருளாதார ஆய்வறிக்கை 2024-25

Posted On: 31 JAN 2025 1:46PM by PIB Chennai

பாசன வசதிகளை மேம்படுத்துவதற்காக நீர்ப்பாசன மேம்பாடு மற்றும் நீர் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது என்று மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 கூறுகிறது.  நிதியாண்டு 2016-க்கும், 2021-க்கும் இடையே பாசனப் பரப்பு 49.3 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நீர்ப்பாசன அடர்த்தி 144.2 சதவீதத்திலிருந்து 154.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நிதியாண்டு 2016 முதல் நிதியாண்டு 2025 வரை (டிசம்பர் 2024-ன் இறுதியில்), ஒரு சொட்டுக்கு அதிக மகசூல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு ரூ. 21968.75 கோடி விடுவிக்கப்பட்டது. இது 95.58 லட்சம் ஹெக்டேர் என்ற  முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது சுமார் 104.67 சதவீதம் அதிகமாகும்.

நுண்ணீர்ப்பாசன நிதியத்தின் கீழ் பெறப்பட்ட கடன்களில் மாநிலங்களுக்கு 2 சதவீத வட்டி மானியம் புதுமையான திட்டங்களை ஆதரிக்கிறது. 4709 கோடி ரூபாய்க்கு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதுவரை 3640 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயத்தை ஆதரிப்பதற்காக, அரசு 2015 முதல் இரண்டு  சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. பாரம்பரிய வேளாண்மை திட்டத்தின் கீழ், 14.99 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 52,289 தொகுப்புகளும், 25.30 லட்சம் விவசாயிகளும் திரட்டப்பட்டுள்ளனர். இதேபோல், 434 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, மொத்தம் 1.73 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 2.19 லட்சம் விவசாயிகள் பயனடைகின்றனர்.

இந்தியாவில் கூட்டுறவுச் சங்கங்கள், விவசாயம், கடன் மற்றும் வங்கி, வீட்டுவசதி மற்றும் பெண்கள் நலன் உள்ளிட்ட பல துறைகளில் முக்கிய செயல்பாடுகளை செயல்படுத்துகின்றன.  கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த, மத்திய அரசு பல்வேறு உத்திசார் முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்களுக்கான மாதிரி துணைச் சட்டங்களின் அறிமுகம் இதில் அடங்கும். அவற்றின் செயல்பாடுகளுக்கு ஒரு கட்டமைப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பின்தங்கிய ஊராட்சிகளில் 9,000-க்கும் அதிகமான புதிய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பால் மற்றும் மீன்வள கூட்டுறவுகள் நிறுவப்பட்டு, பல்வேறு கூட்டமைப்புகளின் ஆதரவைப் பெறுகின்றன. அதிக அணுகல் தன்மைக்கான அரசு உந்துதலின் ஒரு பகுதியாக, 240 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் சில்லறை பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்களுக்கு விண்ணப்பித்துள்ளன. இவற்றில் 39 தற்போது செயல்படத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக்  காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097882

***

SMB/AG/DL


(Release ID: 2098178) Visitor Counter : 10