குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

செய்தி வெளியீடு

குடியரசுத் தலைவர் அலுவலகம் விளக்கம்

प्रविष्टि तिथि: 31 JAN 2025 3:44PM by PIB Chennai

நாடாளுமன்றத்தில் மாண்புமிகு குடியரசுத் தலைவரின் உரை குறித்து காங்கிரஸ் கட்சியின் சில முக்கிய தலைவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், உயர் பதவியின் கண்ணியத்தை புண்படுத்தும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை. உரையின் முடிவில் குடியரசுத் தலைவர் மிகவும் சோர்வடைந்து விட்டதாகவும், அவரால் பேச முடியவில்லை என்றும் அந்தத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

உண்மையைத் தெளிவுபடுத்த குடியரசுத் தலைவர் மாளிகை விரும்புகிறது. குடியரசுத் தலைவர் எந்த நிலையிலும் சோர்வடையவில்லை. உண்மையில், அவர் தமது உரையின் போது எந்தத் தருணத்திலும் சோர்வடையவில்லை. விளிம்புநிலை சமூகங்களுக்காகவும், பெண்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் பேசுவதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை என்பதை அவர் உறுதியாக நம்புகிறார். இந்தத் தலைவர்கள் இந்தி போன்ற இந்திய மொழிகளில் உள்ள மரபுத் தொடர்களையும் சொல்லாடல் முறையையும் அறிந்திருக்கவில்லை. அதனால்  தவறான எண்ணம் உருவாகியிருக்கலாம் என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் நம்புகிறது. எவ்வாறாயினும், இத்தகைய கருத்துக்கள் மோசமானதாக உள்ளன. இவை துரதிர்ஷ்டவசமானவை என்பதுடன் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை.

***

TS/PLM/RJ/KR/DL


(रिलीज़ आईडी: 2098077) आगंतुक पटल : 69
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi