பாதுகாப்பு அமைச்சகம்
2025 குடியரசு தின அணிவகுப்பில் சிறந்த அணிவகுப்பு குழு, அலங்கார ஊர்திக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன
இடுகை இடப்பட்ட நாள்:
29 JAN 2025 12:57PM by PIB Chennai
2025 குடியரசு தின அணிவகுப்பில் சிறந்த அணிவகுப்பு குழு, அலங்கார ஊர்திகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. படைப்பிரிவுகள் மற்றும் மத்திய ஆயுத காவல் படைகள் (சிஏபிஎஃப்), பிற துணைப் படைகள், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளின் அணிவகுப்பு குழுக்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருந்தது. இக் குழு தமது முடிவுகளை அறிவித்துள்ளது:
படைப்பிரிவுகளில் சிறந்த அணிவகுப்பு குழு- ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸ் படைப்பிரிவு
சிஏபிஎஃப் / பிற துணைப் படைகளில் சிறந்த அணிவகுப்பு குழு - தில்லி காவல்துறை அணிவகுப்பு குழு
முதல் மூன்று சிறந்த அலங்கார ஊர்திகள் (மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்)
1-வது - உத்தரப்பிரதேசம் (மஹாகும்பமேளா 2025 - ஸ்வர்னிம் பாரத்: பாரம்பரியமும், வளர்ச்சியும்)
2-வது - திரிபுரா (பெரும் வழிபாடு: திரிபுராவில் 14 தெய்வங்களின் வழிபாடு - கார்ச்சி பூஜை)
3-வது - ஆந்திரப் பிரதேசம் (எடிகோபகா பொம்மலு - சுற்றுச்சூழலுக்கு உகந்த மர பொம்மைகள்)
· மத்திய அமைச்சகங்கள் / துறைகளின் சிறந்த அலங்கார ஊர்தி
பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் (பழங்குடியினர் பெருமை ஆண்டு)
சிறப்புப் பரிசு:
1. மத்திய பொதுப்பணித்துறை (இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகள்)
2. 'ஜெயதி ஜெய் மாமஹ பாரதம்' நடனக் குழு
அத்துடன், 2025 ஜனவரி 26 முதல் 28 வரை மைகவ் இணையதளத்தில் குடிமக்கள் தங்களுக்கு பிடித்த அலங்கார ஊர்தி, அணிவகுப்பு குழுக்களுக்கு 'பிரபல தேர்வு பிரிவு' என்ற பெயரில் வாக்களிக்க ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் பின்வருமாறு:
படைப்பிரிவுகளில் சிறந்த அணிவகுப்பு குழு – சிக்னல் குழு
சிஏபிஎஃப் / பிற துணைப் படைகளில் சிறந்த அணிவகுப்பு குழு - சிஆர்பிஎஃப் அணிவகுப்பு படைப்பிரிவு
முதல் மூன்று சிறந்த அலங்கார ஊர்திகள் (மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்)
1-வது - குஜராத் (ஸ்வர்னிம் பாரத்: பாரம்பரியமும், வளர்ச்சியும்)
2-வது – உத்தரபிரதேசம் (மகா கும்பமேளா 2025 - ஸ்வர்னிம் பாரத்: பாரம்பரியமும், வளர்ச்சியும்)
3-வது - உத்தராகண்ட் (உத்தராகண்ட்: கலாச்சார பாரம்பரியமும், சாகச விளையாட்டும்)
மத்திய அமைச்சகங்கள், துறைகளில் சிறந்த அலங்கார ஊர்தி - மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (அமைச்சகத்தின் விரிவான திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்ட மகளிர் மற்றும் குழந்தைகளின் பன்முகப் பயணம்)
***
(Release ID: 2097256)
TS/IR/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2097292)
வருகையாளர் எண்ணிக்கை : 172