தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகா கும்பமேளா 2025: மவுனி அமாவாசை அன்று பக்தர்களின் பாதுகாப்புக்காக 1000-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்; மகாகும்ப நகரில் உள்ள அதிநவீன சிறப்பு மருத்துவமனையில் 300 சிறப்பு மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்

Posted On: 28 JAN 2025 6:31PM by PIB Chennai

மவுனி அமாவாசையையொட்டி, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, உத்தரப்பிரதேச அரசு மகாகும்ப நகரில் 1000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்தியுள்ளது. மகாகும்பமேளாவின் ஒவ்வொரு படித்துறையிலும் நவீன மருத்துவ வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறிய அறுவை சிகிச்சைகள் முதல் பெரிய அறுவை சிகிச்சைகள் வரை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மகாகும்பமேளா நகரில், அதிநவீன சிறப்பு மருத்துவமனையில் 300 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, எந்தவொரு அவசர சூழ்நிலையையும் கையாளத் தயாராக உள்ளனர். இதுவரை, மருத்துவமனைகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர். மேலும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட நோய் அறிதல் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

மகாகும்ப மேளாவின் சிறப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் கௌரவ் துபே, நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வரும் பக்தர்கள் மகாகும்ப நகரில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். நவீன மருத்துவ வசதிகளுடன் மேளாவை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் மாற்ற அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று கூறினார்.

மேலும், அரசின் ஆதரவுடன், மடங்கள், கோயில்கள், ஆசிரமங்களைச் சேர்ந்த துறவிகளும் மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் மூலம் பக்தர்களுக்கு உதவுகிறார்கள். இந்தத் துறவிகள் பல்வேறு முகாம்களை நடத்தி பக்தர்களுக்கு ஆயுர்வேத, ஹோமியோபதி சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கி வருகின்றனர்.

***

TS/PKV/AG/DL


(Release ID: 2097141) Visitor Counter : 19