தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடியரசு தினத்தன்று மகா கும்பமேளா நகரில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் டிஜிட்டல் கண்காட்சிக்கு பார்வையாளர்கள் குவிந்தனர்.

Posted On: 26 JAN 2025 10:30PM by PIB Chennai

2025-ஆம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி, பிரயாக்ராஜின் மகா கும்பமேளா நகரில் அமைந்துள்ள தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் டிஜிட்டல் கண்காட்சியில் ஏராளமானோர் திரண்டனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சியை வெகுவாகப் பாராட்டினர், கண்காட்சியில் டிஜிட்டல் செல்ஃபி பாயிண்டில் செல்ஃபி எடுக்க பெண்களும் குழந்தைகளும் மிகுந்த ஆர்வம் காட்டினர்.செல்ஃபி பாயிண்டுடன், பார்வையாளர்கள் அந்த இடத்தில் இருந்த சமுத்திர மந்தனின் (கடலைக் கடைந்தெடுத்தல்) அடையாளச் சிலையையும் பாராட்டி, அதனுடனும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை திரிவேணி சாலையில் உள்ள பரேட் மைதானத்தில் மகா கும்பமேளாவுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இந்த டிஜிட்டல் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கண்காட்சி வளாகத்தில், ஏராளமான பார்வையாளர்கள் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் டிஜிட்டல் கண்காட்சிகள், பிரதமரின் அனுபவப் பயிற்சித் திட்டம், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மற்றும் புத்தக வெளியீட்டுப் பிரிவு  அரங்குகள் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து தகவல்களை தெரிந்து கொண்டனர்.

இக்கண்காட்சி மூலம் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், ட்ரோன் சகோதரி, லட்சாதிபதி சகோதரி, வேவ்ஸ்,பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டம், முத்ரா திட்டம், பிரதமரின் பயிர் பாதுகாப்பு திட்டம் ,டிஜிட்டல் இந்தியா, பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், வித்யாஞ்சலி,  தற்சார்பு இந்தியா, திறன் இந்தியா, ஒரே பாரதம் உன்னத பாரதம், பிரதமரின்  உஜ்வாலா  திட்டம்,  வீடு தோறும் குழாய் வழிக் குடிநீர் திட்டம்,  பிரதமரின் கௌஷல் விகாஸ்  திட்டம்,  தூய்மை இந்தியா இயக்கம்,  பிரதமரின் ஸ்வநிதி  திட்டம், இந்தியாவின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்,  பிரதமரின்  கிசான் சம்மான் நிதி திட்டம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பல்வேறு திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருவது, குறிப்பிடத்தக்கது.

***

(Release ID: 2096572)
TS/BR/KR

 


(Release ID: 2096628) Visitor Counter : 15