கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகா கும்பமேளா நடைபெற்று வரும் நகரில் 76-வது குடியரசு தின விழா பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது

Posted On: 26 JAN 2025 10:17PM by PIB Chennai

புனித நகரமான பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டின் மகா கும்பமேளாவின் போது 76-வது குடியரசு தினத்தின் சிறப்பு கொண்டாட்டம் நடைபெற்றது. நம்பிக்கை மற்றும் பக்தியின் இந்த தனித்துவமான திருவிழாவில், புனித நீராடுவதற்காக ஏராளமான யாத்ரீகர்கள் சங்கமத்திற்கு வந்தடைந்தனர். இந்தக் குடியரசு தினத்தில், மகா கும்பமேளாவின் கண்காட்சி பகுதி மற்றும் அகாராக்கள் இந்திய தேசியத்தின்  வண்ணங்களில் திளைத்திருந்தன.  துறவிகளின் அகாராக்கள், பக்தர்களின் முகாம்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நியாயவிலை அலுவலகங்கள் ஆகியவற்றில்  கொடியேற்ற விழாக்கள் நடைபெற்றன.

மகா கும்பமேளா நகரில் மூத்த குடிமக்கள் பங்கேற்றது குடியரசு தின விழாவிற்கு பெருமை சேர்த்தது. மேலும், மகா கும்பமேளாவின் கண்காட்சிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிகளை அரசு ஏற்பாடு செய்தது. இந்த முகாம்கள் மூத்த குடிமக்களுக்கான தங்குமிடங்களாக செயல்படுகின்றன. அவர்கள் மகா கும்பமேளாவிற்கு வருகை தரவும், சங்கமத்தில் புனித நீராடவும் இவை உதவிகரமாக உள்ளன.

இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறையின் முகாமில் சிறப்புக் காட்சி அரங்கேறியது. மிர்சாபூரில் உள்ள முதியோர் இல்லத்தில் இருந்து வந்திருந்த எழுபது வயதான முன்னி தேவி கொடியேற்றினார். இந்தத் தருணம் உணர்ச்சிப்பூர்வமானதாக மட்டுமல்லாமல் மகா கும்பமேளா என்பது நம்பிக்கையின் திருவிழாவாக மட்டுமல்லாமல் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் பங்கேற்பின் கொண்டாட்டமும் கூட என்பதை இந்த நிகழ்வு அடையாளப்படுத்தியது. முன்னி தேவி போன்ற மூத்த குடிமக்கள் கலந்துகொண்டது இந்த நாளை மேலும் சிறப்படையச் செய்தது.

இந்த ஆண்டு, உத்தரப்பிரதேச அரசு ஒரு சிறப்பு முயற்சியை அறிமுகப்படுத்தியது. முதியோர் இல்லங்களில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்காக கும்பமேளா பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 450 மூத்த குடிமக்கள் மகா கும்பமேளாவை அடைந்து சங்கமத்தில் நீராடியுள்ளனர். நிகழ்வின் போது, மகா கும்பமேளா நகரில் யோகா அமர்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2096571

***

(Release ID: 2096571)
TS/BR/KR

 


(Release ID: 2096616) Visitor Counter : 17