பிரதமர் அலுவலகம்
குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி
प्रविष्टि तिथि:
26 JAN 2025 5:56PM by PIB Chennai
நாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு உலகத் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
நேபாள பிரதமர் திரு சர்மா ஒலி வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் தள பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நேபாளப் பிரதமர் நண்பர் கே.பி. சர்மா ஒலியின் (@kpsharmaoli ), அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியா தனது குடியரசின் 75-வது ஆண்டை நிறைவு செய்யும் வேளையில், இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான நட்புறவின் வரலாற்று பிணைப்பை நாம் ஆழமாகப் போற்றுகிறோம். வரும் காலங்களில் இது தொடர்ந்து வளரும் என்று நான் நம்புகிறேன்"
மாலத்தீவு அதிபர் திரு முகமது முய்சு வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தள பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் (@MMuizzu) வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியா - மாலத்தீவு இடையேயான நீண்டகால நட்புறவு குறித்த உங்கள் உணர்வுகளை நான் முழுமையாக பகிர்ந்து கொள்கிறேன். இந்த நட்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றின் பிணைப்புகளை ஆழப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்."
பூடான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கே வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் தள பதிவுக்குப் பதில் அளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தியக் குடியரசின் 75 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த நண்பர் பூடான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கே (@tsheringtobgay) அவர்களுக்கு நன்றி. இந்தியா - பூடான் இடையேயான தனித்துவமான சிறப்பு ஒத்துழைப்பை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்."
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் திரு ஷேர் பகதூர் தியூபா வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தியாவின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு திரு ஷேர் பகதூர் தியூபாவின் (@SherBDeuba) அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. நமது மக்களுக்கு இடையேயான பழமையான நட்புறவு தொடர்ந்து செழித்து வலுவடையட்டும்"
மாலத்தீவு முன்னாள் அதிபர் திரு இப்ராஹிம் முகமது சோலிஹ் வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ்ட்ரா பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தியாவின் குடியரசு தினத்துக்கு வாழ்த்துத் தெரிவித்த திரு இப்ராஹிம் முகமது சோலிஹ்-ஹுக்கு (@ibusolih) நன்றி."
***
PLM/KV
(रिलीज़ आईडी: 2096479)
आगंतुक पटल : 90
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam