பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் 76-வது குடியரசு தின விழாவில் பஞ்சாயத்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
प्रविष्टि तिथि:
26 JAN 2025 2:04PM by PIB Chennai
76-வது குடியரசு தினத்தன்று, 575 க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிராமப்புற இந்தியாவின் துடிப்பை அடையாளப்படுத்தும் மாபெரும் குடியரசு தின அணிவகுப்பைக் கண்டுகளித்தனர். அவர்களில், கிட்டத்தட்ட 40% பெண்கள் பங்கேற்பாளர்கள், பாலினத்தை உள்ளடக்கிய நிர்வாகத்தை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுகின்றனர். அடிமட்ட ஜனநாயகத்தை மதிக்கும் முயற்சியில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், 25 ஜனவரி 2025 அன்று புது தில்லியில், பஞ்சாயத்து தலைவர்கள் , கிராமப் பிரதான்கள் மற்றும் இதர பஞ்சாயத்து பிரதிநிதிகள் உட்பட பஞ்சாயத்து தலைவர்களை கவுரவித்தது. பஞ்சாயத்துகளைச் சேர்ந்த இந்த சிறப்பு விருந்தினர்கள், வீடுதோறும் குடிநீர் திட்டம், பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம், இந்திரதனுஷ் இயக்கம், பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டம் (ஆயுஷ்மான் பாரத்), உஜ்வாலா திட்டம்,. ஊட்டச்சத்து இயக்கம், முத்ரா திட்டம், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், மாத்ரு வந்தனா திட்டம், கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டம், போன்ற அரசின் முதன்மைத் திட்டங்களை நிறைவு செய்வதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் அல்லது அவர்களின் கிராம பஞ்சாயத்துகளில் விதிவிலக்கான பணிகளைச் செய்த மாநில மற்றும் தேசிய விருது பெற்றவர்கள் ஆவர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, புது தில்லியில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு பாராட்டு விழாவில் பேசிய மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங், பஞ்சாயத்து தலைவர்கள்தான் கிராமப்புற மாற்றத்திற்கு உந்து சக்தியாக உள்ளனர். இந்தியாவில் முதன்மையான அரசு திட்டங்களை தடையின்றி செயல்படுத்துவதற்கும், பங்கேற்பு ஆளுகையின் உணர்வை வளர்ப்பதற்கும். இந்த அடிமட்டத் தலைவர்கள் 10 முதன்மைத் திட்டங்களை நிறைவு செய்வதில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர் என்று அவர் எடுத்துரைத்தார், இப்போது நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பயனடைகிறார்கள், அந்தந்த கிராம பஞ்சாயத்துகளில் உறுதியான விளைவுகளின் மூலம் மேம்பட்ட "வாழ்க்கையை" உறுதிசெய்கிறார்கள் என்று அவர் கூறினார்.
மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர், பேராசிரியர். எஸ்.பி.சிங் பாகேல், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும், கடந்த தசாப்தத்தில் ஆறு மடங்கு அதிகமாக விநியோகித்ததையும் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2096410
***
PKV/KV
(रिलीज़ आईडी: 2096424)
आगंतुक पटल : 78