கூட்டுறவு அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு அமித் ஷா ஜனவரி 24 அன்று மும்பையில் தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்
Posted On:
22 JAN 2025 4:13PM by PIB Chennai
மும்பையில் தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (என்யுசிஎஃப்டிசி) கார்ப்பரேட் அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா 2025 ஜனவரி 24 அன்று திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடியின் கூட்டுறவின் மூலம் வளம் என்ற தொலைநோக்குப் பார்வையை மேலும் வலுப்படுத்த கூட்டுறவுத் துறையில் பல முக்கிய முயற்சிகள் தொடங்கப்படும்.
திரு அமித் ஷா சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025-க்கான வருடாந்திர நடவடிக்கைகளின் நாட்காட்டியை வெளியிடுவார். நாடு முழுவதும் புதிதாக உருவாக்கப்பட்ட 10,000 பலநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கான பயிற்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் முதன்மை கூட்டுறவு சங்கங்களுக்கான தரவரிசை கட்டமைப்பை அவர் அறிமுகப்படுத்துகிறார்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2095246)
Visitor Counter : 15