தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நவம்பர் 2024-ல் 14.63 லட்சம் நிகர உறுப்பினர்களைச் இபிஎஃப்ஓ-வில் இணைந்துள்ளனர்- 8.74 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்

Posted On: 22 JAN 2025 12:12PM by PIB Chennai

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, (EPFO) நவம்பர் 2024-க்கான தற்காலிக சம்பளப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது 14.63 லட்சம் உறுப்பினர்களின் நிகர சேர்க்கையை வெளிப்படுத்துகிறது. முந்தைய அக்டோபர் 2024 மாதத்துடன் ஒப்பிடும்போது நவம்பர் மாதத்தில் நிகர உறுப்பினர் சேர்க்கை 9.07% அதிகரித்துள்ளது.

மேலும்,  ஆண்டுக்கு ஆண்டு முறையில் நவம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது நிகர உறுப்பினர் சேர்க்கைகளில் 4.88% வளர்ச்சி  ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 2024-ல் இபிஎஃப்ஓ-வில் சுமார் 8.74 லட்சம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். புதிய உறுப்பினர்களின் சேர்க்கை அதற்கு முந்தைய அக்டோபர் 2024 மாதத்துடன் ஒப்பிடும்போது 16.58% அதிகமாகும். மேலும், ஆண்டுகளுக்கு ஆண்டு பகுப்பாய்வின்படி முந்தைய ஆண்டு இதே மாதத்தை விட(நவம்பர் 2023)புதிய உறுப்பினர் சேர்க்கை 18.80% அதிகமாகும். இந்த எழுச்சிக்கு வளர்ந்து வரும் வேலை வாய்ப்புகள், பணியாளர் நலன்கள் குறித்த விழிப்புணர்வு, இபிஎஃப்ஓ-வின் வெற்றிகரமான மக்கள் தொடர்பு திட்டங்கள் ஆகியவை காரணங்களாகும்.

***

(Release ID: 2095007)

TS/PLM/AG/KR


(Release ID: 2095067) Visitor Counter : 22