பிரதமர் அலுவலகம்
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் இயக்கம் லட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்து, பெண்களின் முன்னேற்றத்தை அதிகரித்துள்ளது: பிரதமர்
प्रविष्टि तिथि:
22 JAN 2025 1:25PM by PIB Chennai
பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக கற்பிப்போம் இயக்கம் லட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது என்றும், இந்தியாவின் முன்னேற்றத்தில் பெண்களை முன்னணியில் நிறுத்தியுள்ளது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவியின் கட்டுரைக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் தெரிவித்துள்ள கருத்தில், இந்தியாவின் மகள்கள் எவ்வாறு மாற்றத்தை உருவாக்குபவர்களாகவும், தொழில்முனைவோர் களாகவும், தலைவர்களாகவும் உருவாகி வருகிறார்கள் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தள பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தியாவின் மகள்கள் மாற்றத்தை உருவாக்குபவர்களாகவும், தொழில்முனைவோர்களாகவும், தலைவர்களாகவும் எவ்வாறு உருவாகி வருகிறார்கள் என்பதை மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி (@Annapurna4BJP) எடுத்துரைத்துள்ளார். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் (#BetiBachaoBetiPadhao) முன்முயற்சி பல லட்சக்கணக்கான பெண்களுக்கு உத்வேகம் அளித்துள்ளதுடன் இந்தியாவின் முன்னேற்றத்தில் பெண்களை முன்னணியில் நிலைநிறுத்தியுள்ளது.”
***
(Release ID: 2095023)
TS/PLM/AG/KR
(रिलीज़ आईडी: 2095064)
आगंतुक पटल : 56
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
हिन्दी
,
Punjabi
,
Odia
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Gujarati
,
Kannada