சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரயாக்ராஜில் "நமது அரசியல் அமைப்பு நமது பெருமை" இயக்க நிகழ்ச்சி

Posted On: 22 JAN 2025 10:20AM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பு மற்றும் மக்களின் சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நீதித்துறை நாளை (2025 ஜனவரி 24) உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் நமது அரசியலமைப்பு நமது பெருமை இயக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த இயக்கம், கடந்த ஆண்டு இதே நாளில்  (2024 ஜனவரி 24)  புதுதில்லியில் குடியரசு துணைத் தலைவரால் தொடங்கிவைக்கப்பட்டது.

இந்த இயக்கத்தில் மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் பங்கேற்று இருந்தனர். 1.3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மைகவ் தளத்தில் பாஞ்ச் பிரான் என்ற ஐந்து உறுதிமொழிகளை உற்சாகமாக எடுத்துக்கொண்டுள்ளனர். இது தேச நிர்மாணத்தில் அவர்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இந்த இயக்கம் ஒரு வருட கால முயற்சியாகும்.   பிகானேர் (ராஜஸ்தான்), பிரயாக்ராஜ் (உத்தரபிரதேசம்), கௌஹாத்தி (அசாம்) உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே பிராந்திய அளவிலான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

தற்போதைய நிகழ்வு பிரயாக்ராஜில் உள்ள அரியில் படித்துறையில் உள்ள பர்மார்த் திரிவேணி புஷ்ப்பில் நடைபெறும். அங்கு இந்த இயக்கத்தின் வெற்றியையும் அதன் சாதனைகளையும் குறிக்கும் வகையில் பல முக்கிய நடவடிக்கைகள் நடைபெறும்.

இந்த நிகழ்வின் போது சட்டத்துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெக்வால் இந்த இயக்கத்தின் சாதனையை விளக்கும் கையேட்டை வெளியிடுவார்.

***

(Release ID: 2094983)

TS/PLM/AG/KR

 


(Release ID: 2095045) Visitor Counter : 20