சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மஹா கும்பமேளா 2025 -ல் உணவுப் பாதுகாப்புக்கான விரிவான நடவடிக்கைகளை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் மேற்கொண்டு வருகிறது

Posted On: 19 JAN 2025 6:58PM by PIB Chennai

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா 2025-ல், லட்சக் கணக்கான பக்தர்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் விரிவான முறையில் ல் வலுவான நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் கண்காணிப்பு, நடமாடும் உணவு சோதனை ஆய்வகங்கள்  மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம், மஹா கும்பமேளாவில்  உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆணையம் முன்னணியில் உள்ளது.

உத்தரப்பிரதேச அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துடன் இணைந்து, மகா கும்பமேளா பகுதியின் பல்வேறு பிரிவுகளில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உணவு ஆய்வாளர்களுடன் 10 நடமாடும் உணவு சோதனை ஆய்வகங்களை நிறுத்தியுள்ளது. இந்த நடமாடும் உணவுப் பரிசோதனைக் கூடங்கள் அந்தந்த இடங்களில் உணவுப் பொருட்களில் கலப்படம் இருக்கிறதா என்றும் உணவு கெட்டுப்போய்  உள்ளதா எனவும் பரிசோதனை செய்கின்றன . மேலும் உணவு வணிகர்கள், தெருவோர உணவு விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, மேளாவில் பாதுகாப்பான உணவுச் சூழலை உறுதி செய்து வருகின்றன.

மேளா நடைபெறும் இடமானது ஐந்து மண்டலங்கள் மற்றும் 25 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரங்களை தொடர்ந்து கண்காணிக்க ஒவ்வொரு பிரிவிலும்  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பை வலுப்படுத்த, ஐந்து தலைமை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட மொத்தம் 56 உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

உணவகங்கள் மற்றும் சிறிய உணவுக் கடைகளில் உள்ள உணவின் தரத்தை சோதிக்க அவை வழக்கமான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. உணவுப் பாதுகாப்பு தொடர்பான புகார்களை உடனடியாக நிவர்த்தி செய்யவும், பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம் உட்பட சமையல் முறைகளில் கடுமையான சோதனைகள் மூலம் உடனடி நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவும் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகா கும்பமேளா பகுதிக்கு அனுப்பப்பட்ட அரிசி, சர்க்கரை, கோதுமை மாவு மற்றும் பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மாதிரிகள் தொடர்ந்து சோதனைக்காக சேகரிக்கப்பட்டு வருகின்றன.

***

(Release ID: 2094337)

TS/IR/AG/KR

 


(Release ID: 2094498) Visitor Counter : 8