பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
ஊரக இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்: ஸ்வமிதா திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 65 லட்சம் சொத்து அட்டைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை வழங்குகிறார்
Posted On:
17 JAN 2025 2:48PM by PIB Chennai
இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு அதிகாரம் அளித்தலையும் நிர்வாகப் பயணத்தில் முக்கிய மைல் கல்லை குறிக்கும் வகையிலும் நாளை (2025, ஜனவரி 18) பிற்பகல் 12.30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கும் நிகழ்வுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகிக்கின்றார். சத்தீஷ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோராம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் கிராமங்களுக்கான 65 லட்சத்துக்கும் அதிகமான ஸ்வமித்வா சொத்து அட்டைகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளன. ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், தயாரிக்கப்பட்டுள்ள சுமார் 2.25 கோடி சொத்து அட்டைகளில் ஒரே நாளில் 65 லட்சம் சொத்து அட்டைகள் வழங்கப்படுவது வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாகும்.
இந்த நிகழ்வின் போது, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடுவதோடு, நாட்டு மக்களுக்கும் உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல் பஞ்சாய்த்து ராஜ் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
மேலும் பல மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், சம்பந்தப்பட்ட துறையின் மாநில/ யூனியன் பிரதேச அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், பஞ்சாயத்து பிரதிநிதிகள் இணைய வழியில் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள். 230 மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் நேரடியாக சொத்து அட்டைகள் வழங்கப்படும்.
நாடு முழுவதும் 3.17 லட்சம் கிராமங்களில் ட்ரோன் மூலம் நில ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டிருப்பது ஸ்வமித்வா திட்டத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2093718
***
TS/SMB/RS/KV
(Release ID: 2093786)
Visitor Counter : 48