தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        மாற்றத்தை விரும்பும் மாவட்டத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்ய மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஜார்க்கண்ட் செல்கிறார் 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                15 JAN 2025 5:49PM by PIB Chennai
                
                
                
                
                
                
                மாற்றத்தை விரும்பும் மாவட்டத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்ய, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் பகுதிக்கு 2025 ஜனவரி 16 முதல் 18 வரை மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார்.
வியாழக்கிழமை அன்று, மாவட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, மாவட்டத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவுள்ளார்.
சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில், அமைச்சர் ஜகந்நாத்பூரில் உள்ள தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் காராங்ஜியாவில் உள்ள மீன் வளர்ப்பு பண்ணை ஆகியவற்றை பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து, செயில் சுரங்கத்திற்கு செல்கிறார்.
சுற்றுப்பயணத்தின் இறுதி நாள் அன்று மாவட்ட அதிகாரிகள், துறைத் தலைவர்களுடனான கலந்துரையாடலில் அவர் கலந்துகொள்கிறார். அதைத் தொடர்ந்து சைபாசாவில் மாற்றத்தை விரும்பும் மாவட்டம் (ஆஸ்பைரேஷனல் மாவட்டம்) மற்றும் மாற்றத்தை விரும்பும் வட்டாரங்கள் திட்டத்தின் முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்கும், மாவட்டத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொள்கிறார்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2093136 
-------------- 
TS/IR/RS/DL
                
                
                
                
                
                (Release ID: 2093221)
                Visitor Counter : 52