ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் 8,21,190 கான்கீரிட் வீடுகளை பயனாளிகளுக்கு இன்று வழங்குகிறார்
प्रविष्टि तिथि:
15 JAN 2025 1:29PM by PIB Chennai
மத்தியப்பிரதேச மாநிலத்தில் ரூ.12,636 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 8,21,190 கான்கீரிட் வீடுகளை மத்திய ஊரக மேம்பாடு மற்றும் வேளாண் அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷாவில் உள்ள பயனாளிகளுக்கு இன்று வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்தியப்பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு புதுமனை புகுவிழாவும் லட்சாதிபதி சகோதரிகள் சான்றிதழ் வழங்கும்' விழாவும் மத்திய அமைச்சர், அம்மாநில முதலமைச்சர் முன்னிலையில் நடைபெறுகிறது.
வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2018-ம் ஆண்டின் பட்டியல் அடிப்படையில், மத்தியப்பிரதேசத்தில் 16.42 லட்சம் குடும்பங்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ளன. 8.21 லட்சம் வீடுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கான்கீரிட் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும், மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங், விதிஷாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார்.
-----
TS/SV/KPG/KV
(रिलीज़ आईडी: 2093054)
आगंतुक पटल : 73