குடியரசுத் தலைவர் செயலகம்
லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், மாக் பிஹு பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து
Posted On:
12 JAN 2025 6:26PM by PIB Chennai
லோஹ்ரி பண்டிகை ஜனவரி 13-ம் தேதி கொண்டாடப்படுகிறது). மகர சங்கராந்தி, பொங்கல், மாக் பிஹு பண்டிகைகள் ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இவற்றை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
"லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், மாக் பிஹு பண்டிகைகளை முன்னிட்டு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து நாட்டுமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பண்டிகைகள் நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளங்களாக திகழ்கின்றன. அவை உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் இந்த திருவிழாக்கள் இயற்கையுடனான நமது இணக்கமான உறவை வெளிப்படுத்துகின்றன. மக்கள் புனித நதிகளில் புனித நீராடி இந்த சந்தர்ப்பங்களில் தொண்டு செயல்களைச் செய்கிறார்கள்.
பயிர்களுடன் தொடர்புடைய இந்த பண்டிகைகள் மூலம், தேசத்திற்கு உணவளிக்க அயராது உழைக்கும் கடின உழைப்பாளி விவசாயிகளுக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம்.
இந்த பண்டிகைகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நாம் அதிக தீவிரத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்."
***
PLM/DL
(Release ID: 2092287)
Visitor Counter : 39