நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வாக ரூ.1,73,030 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது

தமிழகத்திற்கு ரூ.7057.89 கோடி விடுவிப்பு

Posted On: 10 JAN 2025 1:40PM by PIB Chennai

மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வு தொகையாக ரூ.1,73,030 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த நிதி 2024-ம் ஆண்டு டிசம்பரில் ரூ.89,086 கோடியாக இருந்தது.

மூலதன செலவினங்களை விரைவுபடுத்தவும், மேம்பாடு, நலத்திட்டங்கள் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும் மாநிலங்களுக்கு இந்த மாதம் கூடுதல் தொகை பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இதன்படி தமிழகத்திற்கு வரிப்பகிர்வாக ரூ. 7057.89 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

***

(Release ID: 2091732)

TS/VS/AG/KR


(Release ID: 2091782) Visitor Counter : 55