பிரதமர் அலுவலகம்
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
09 JAN 2025 8:30AM by PIB Chennai
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை அறிந்து வேதனை அடைந்தேன். தங்களுக்கு நெருக்கமானவர்களையும் அன்புக்குரியவர்களையும் இழந்துள்ளவர்களுக்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆந்திர அரசு செய்து வருகிறது: பிரதமர் @narendramodi"
***
TS/BR/KR
(Release ID: 2091380)
Visitor Counter : 32
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam