சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அசாமில் சுகாதார திட்டங்களை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜே.பி.நட்டா ஆய்வு செய்தார்
Posted On:
08 JAN 2025 6:05PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா இன்று அசாமில் உள்ள லோகோபிரியா கோபிநாத் போர்டோலோய் மண்டல மனநல நிறுவனம், மங்கள்டாய் மாவட்ட சிவில் மருத்துவமனை, குவஹாத்தி எய்ம்ஸ் உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேஜ்பூரில் உள்ள எல்ஜி - மண்டல மனநல மருத்துவ நிறுவனத்துக்குச் சென்ற அவர், அந்த நிறுவனத்தின் புதிய நூலகம், தகவல் மையம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
எல்ஜிபிஆர்ஐஎம்எச்-ல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் திரு நட்டா பங்கேற்றார். அசாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் திரு அசோக் சிங்கால் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
தர்ராங் மாவட்டத்தில் உள்ள மங்கல்டாய் மாவட்ட சிவில் மருத்துவமனைக்கும் திரு நட்டா சென்றார். அங்கு 50 அதிநவீன படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091222
***
TS/PLM/RS/DL
(Release ID: 2091253)
Visitor Counter : 20