சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சீனாவில் அதிகரித்து வரும் சுவாச நோய்களைக் கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சகம் கூட்டு கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்டுகிறது.

Posted On: 04 JAN 2025 8:18PM by PIB Chennai

கடந்த சில வாரங்களாக சீனாவில் அதிகரித்து வரும் சுவாச நோய்கள் பற்றிய செய்திகளைக் கருத்தில் கொண்டு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் தலைமையில் கூட்டு கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. உலக சுகாதார அமைப்பு, பேரிடர் மேலாண்மை செல், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் , தேசிய நோய் கட்டுப்பாடு மையம் , இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் , அவசர மருத்துவ நிவாரணப் பிரிவு ஆகியவற்றின் நிபுணர்கள் , மற்றும் தில்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனையின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

விரிவான விவாதங்களுக்குப் பிறகு, தற்போது கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், பின்வரும்  கருத்துக்கள் ஒப்புக் கொள்ளப்பட்டன:

தற்போது  நிலவி  வரும் காய்ச்சல் பருவத்தைக் கருத்தில் கொண்டு சீனாவில் நிலைமை அசாதாரணமானது அல்ல. தற்போதைய எழுச்சிக்கான காரணம் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், ஆர்.எஸ்.வி மற்றும் ஹெச்.எம்.பி.வி - பருவத்தில் எதிர்பார்க்கப்படும் வழக்கமான நோய்க்கிருமிகள் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கிடைக்கக்கூடிய அனைத்து வழிகள் மூலம் நிலைமையை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது, மேலும் சீனாவின் நிலைமை குறித்த  தகவல்களை சரியான நேரத்தில் பகிருமாறு  உலக சுகாதார அமைப்பு கோரப்பட்டுள்ளது.

இந்த வைரஸ்கள் ஏற்கனவே இந்தியா உட்பட உலகளவில் புழக்கத்தில் உள்ளன.

ஐ.சி.எம்.ஆர் மற்றும் ஐ.டி.எஸ்.பி  இணைப்புகள் மூலம் இன்ஃப்ளூயன்ஸா லைக் இல்னஸ் (ஐ.எல்.ஐ) மற்றும் கடுமையான சுவாச நோய் (எஸ்.ஏ.ஆர்.ஐ) ஆகியவற்றுக்கான வலுவான கண்காணிப்பு அமைப்பு ஏற்கனவே இந்தியாவில் நடைமுறையில் உள்ளது மற்றும் இரண்டின் தரவுகளும் ஐஎல்.ஐ மற்றும் எஸ்.ஏ.ஆர்.ஐ  பாதிப்புகளில் அசாதாரண எழுச்சியைக் காட்டவில்லை.

கடந்த சில வாரங்களில் எதிர்பார்க்கப்படும் பருவகால மாறுபாட்டைத் தவிர, சுவாச நோய் பாதிப்புகள் எதுவும் இல்லை என்பதை மருத்துவமனைகளின் மருத்துவர்களும் உறுதிப்படுத்தினர்.

நாடு முழுவதும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆயத்த பயிற்சியின் தரவுகள், சுவாச நோய்களின் எந்த அதிகரிப்பையும் சமாளிக்க நாடு நன்கு தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டியது.

சுகாதார அமைப்புகள் மற்றும் கண்காணிப்பு வலையமைப்புகள் விழிப்புடன் உள்ளன, வளர்ந்து வரும் எந்தவொரு சுகாதார சவால்களுக்கும் உடனடியாக பதிலளிக்க நாடு தயாராக இருப்பது  உறுதி செய்யப்படுகிறது. 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2090233&reg=6&lang=11 

*********** 


BR/KV


(Release ID: 2090311) Visitor Counter : 39