பிரதமர் அலுவலகம்
தொலைதூர மற்றும் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்யும் மகாராஷ்டிர அரசின் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
02 JAN 2025 10:20AM by PIB Chennai
மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்ய மகாராஷ்டிர மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தேவேந்திர பட்னாவிஸ் பதிவிட்ட எக்ஸ் பதிவுக்கு பதிலளித்த மோடி கூறியிருப்பதாவது:
தொலைதூர மற்றும் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் உறுதி செய்வதற்கான மகாராஷ்டிரா அரசின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். இது நிச்சயமாக 'வாழ்க்கையை எளிதாக்குவதை' ஊக்குவிப்பதோடு, மேலும் பல முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும். கட்சிரோலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எனது சகோதர சகோதரிகளுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
***
TS/PKV/KV/KR
(रिलीज़ आईडी: 2089510)
आगंतुक पटल : 72
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam