பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிர்வாக சீர்தி்ருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் 2024-ம் ஆண்டு செயல்பாடுகள் குறித்த ஆண்டு இறுதி அறிக்கை

Posted On: 28 DEC 2024 4:06PM by PIB Chennai

 

நிர்வாக சீர்தி்ருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் 2024-ம் ஆண்டின் முக்கிய செயல்பாடுகள், பணிகள், சாதனைகளில் சில:

*நிர்வாக சீர்தி்ருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை 100 நாள் செயல் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது.

*மும்பையில் 27-வது தேசிய மின் ஆளுமை மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

* பொதுமக்கள் குறைகளை திறம்பட தீர்ப்பதற்கான தீர்ப்பதற்கான தேசிய பயிலரங்கு நடத்தப்பட்டது.

*தூய்மையை நிறுவனமயமாக்கவும், நிலுவையில் உள்ள குறைகளைக் குறைக்கவும் சிறப்பு இயக்கம் 4.0 வெற்றிகரமாக நடத்தப்பட்டது

*குவஹாத்தியிலும் ராய்ப்பூரிலும் நல்லாட்சி நடைமுறைகள் தொடர்பான மாநாடுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

IIAS- DARPG மாநாடு 2025, பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகத்தில் இலங்கை, மாலைதீவு, மலேசியா, சிங்கப்பூர் ஆகியவற்றுடன் ஒத்துழைப்பு

அபினவ் பஹல் தொடர், தேசிய நல்லாட்சி மற்றும்மின்-ஆளுமை வெபினார் தொடர் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

* 2024 ஏப்ரல் 22 முதல் 24 தேதி வரை லண்டனில் நடைபெற்ற பொதுச் சேவைத் தலைவர்கள், காமன்வெல்த் நாடுகளின் அமைச்சரவையின் செயலாளர்களின் மாநாட்டில், "சிபிஜிஆர்ஏஎம்எஸ் அதிநவீன குறை தீர்க்கும் அமைப்பு", குறை தீர்ப்புக்கான உலகளாவிய சிறந்த நடைமுறையாக அங்கீகரிக்கப்பட்டது.

*2024 ஆம் ஆண்டில், சிபிஜிஆர்ஏஎம்எஸ் தளத்தில் பெறப்பட்ட 24 லட்சத்துக்கும் மேற்பட்ட குறைகளில் 98% குறைகள் சராசரியாக 12 நாட்களுக்குள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளன.

*பொதுமக்களின் குறைகளை சரியான நேரத்தில், சிறந்த முறையில் தீர்ப்பதற்காக 2024 ஆகஸ்ட் 23 அன்று பொதுமக்கள் குறைகளை திறம்பட தீர்ப்பதற்கான விரிவான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது.

*குறை தீர்க்கும் மதிப்பீடும் குறியீடும் (GRAI) 2024 நவம்பர் 18 அன்று வெளியிடப்பட்டது.

* "பொதுமக்கள் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்தல்" குறித்த தேசிய பயிலரங்கு 18 நவம்பர் 2024 அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டது.

* அரசு ஊழியர்களின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருதுகள் நடைமுறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. 2025 ஏப்ரல் 21 அன்று விருதுகள் வழங்கப்படும்

* சிறப்பு இயக்கம் 4.0, 2024 அக்டோபர் 2-31 காலகட்டத்தில் நடைபெற்றது. இது செறிவூட்டல் அணுகுமுறையைப் பின்பற்றி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

* சிறப்பு இயக்கம் 4.0,  5.97 லட்சம் அலுவலக இடங்களில் நடத்தப்பட்டது, 189.75 லட்சம் சதுர அடி அலுவலக இடம் விடுவிக்கப்பட்டது. 45.1 லட்சம் கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. தேவையற்ற பொருட்கள் அகற்றல் மூலம் ரூ .650 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

* ஒட்டுமொத்தமாக, சிறப்பு இயக்கம் 1.0 முதல் 4.0 வரை (2021-2024) ரூ .2364 கோடி ஈட்டி, 643.8 லட்சம் சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது.

*சிறப்பு இயக்கம் 4.0 குறித்து பிரதமர் 2024 நவம்பர் 10 அன்று எக்ஸ் பதிவில் பாராட்டுத் தெரிவித்தார்.

*2024 நவம்பர் 24 தேதியிட்ட மனதின் குரலில் சிறப்பு இயக்கத்தின் பலன்களையும் பிரதமர் பாராட்டினார்.

மின்-அலுவலக பகுப்பாய்வு - செயல்படுத்தலுக்கான தேசிய பயிலரங்கு 29.10.2024 அன்று நடத்தப்பட்டது.

***

PLM/KV

 


(Release ID: 2088608) Visitor Counter : 48