ஆயுஷ்
ஆயுஷ் அமைச்சகம்: 2024-ம் ஆண்டில் செயல்பாடுகள்
பாரம்பரிய மருத்துவ முறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கான அங்கீகாரம்
Posted On:
23 DEC 2024 5:19PM by PIB Chennai
பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான உலகளாவிய அங்கீகாரம் மற்றும் முன்னேற்றத்திற்கான குறிப்பிடத் தக்க முயற்சிகள் இந்த ஆண்டில் எடுக்கப்பட்டுள்ளன.ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளை உலகெங்கிலும் உள்ள முக்கிய சுகாதார அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு இது ஒரு குறிப்பிடத்தகுந்த ஆண்டாகும்.
உலக சுகாதார அமைப்பால் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான சர்வதேச நோய்களின் வகைப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயுர்வேதம், சித்தா, யுனானி போன்ற மருத்துவ முறைகளின் அடிப்படையிலான நோய்கள் குறித்த தரவுகள் மற்றும் சொற்கள் உலக சுகாதார மையத்தின் ஐசிடி-11 வகைப்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ஆயுர்வேதம், யுனானி, சித்தா போன்ற மருத்துமுறைகளில் நோய்களை வரையறை செய்யும் கலைச்சொற்கள் ஒரு குறியீடாக ஏற்படுத்தப்பட்டு, உலக சுகாதார அமைப்பின் நோய் வகைப்பாடு குறித்த வரிசையில் ஐசிடி-11 பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
மகர சங்கராந்தியை முன்னிட்டு, ஆயுஷ் அமைச்சகம் ஜனவரி 1-ம் தேதி முதல் ஜனவரி 14-ம் தேதி வரை சூரிய நமஸ்கார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி இந்தியாவிலும் பிற நாடுகளிலும் யோகா பயிற்சி மற்றும் ஆன்மீக நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டது.
ஆயுஷ் முறைகளின் அடிப்படைக் கோட்பாடான உடல் ஆரோக்கியத்திற்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய அணுகுமுறையை இது வலியுறுத்துகிறது.
வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்காக மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஆயுஷ் அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால். மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி ஆகியோர் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
வளரிளம் பருவ பெண்களிடையே இரத்த சோகையைக் கட்டுப்படுத்துவதற்பகான கூட்டு பொது சுகாதார முயற்சியாக இது உள்ளது.
2024-ம் ஆண்டு குறிப்பிடத்தக்க சாதனைகளுடன், புதிய ஒத்துழைப்புகள் மூலம் ஆயுஷ் அமைச்சகத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கும் ஆண்டாக அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2087319
**
TS/SV/KPG/KV/DL
(Release ID: 2088457)