கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திப்ரூகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

இடுகை இடப்பட்ட நாள்: 24 DEC 2024 6:17PM by PIB Chennai

அசாமின் திப்ரூகரில் சபுவா டாக்கா தேவி ரசிவாசியா கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டங்களில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கலந்து கொண்டு பொன்விழா நினைவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு சோனோவால்,   தொலைதூரமாக உள்ள சபுவாவின் புவியியல் சூழல், ஒப்பீட்டளவில்  பின்தங்கிய நிலைமை ஆகியவற்றின் பின்னணியில் பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு  கல்லூரி ஆற்றிவரும் சேவைகளின் களின் முக்கியத்துவத்தைப் பாராட்டினார்.

பின்னர், சாபுவா எல்ஏசி-யின் கீழ் பிந்தகோட்டா, பலிஜான், கர்ஜன்பனிடோலா பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பயனளிக்கும் ஒருங்கிணைந்த நிதி திட்டம், கர்ஜன் தேயிலை தோட்டத்தில் நான்கு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றில் அமைச்சர் கலந்து கொண்டார். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நலனில் தற்போதைய மத்திய அரசு அதிக அக்கறையுடன் செயல்படுவதாக திரு சர்பானந்த சோனோவால் கூறினார்.

----

TS/PLM/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2087700) வருகையாளர் எண்ணிக்கை : 61
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी , Manipuri