குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இன்றைய நிறுவன சவால்கள் பெரும்பாலும் அர்த்தமுள்ள உரையாடல் மற்றும் உண்மையான வெளிப்பாடு இன்மையால் உருவாகின்றன- குடியரசு துணைத்தலைவர்
Posted On:
14 DEC 2024 12:15PM by PIB Chennai
“இன்றைய நிறுவன சவால்கள் உள்ளிருந்து மற்றும் வெளியே இருந்து அடிக்கடி அர்த்தமுள்ள உரையாடல் மற்றும் உண்மையான வெளிப்பாடுகள் குறைந்ததால் உருவாகின்றன. வெளிப்பாடு மற்றும் அர்த்தமுள்ள உரையாடல் இரண்டும் ஜனநாயகத்தின் விலைமதிப்பற்ற நகைகள். வெளிப்பாடு மற்றும் தொடர்பு ஒருவருக்கொருவரை இணைக்கின்றன. நல்லிணக்கமே வெற்றிக்கு முக்கியமாகும்”, என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர் கூறியுள்ளார்.
எந்தவொரு ஜனநாயகத்திலும் முக்கிய மதிப்புகளின் முக்கியத்துவத்தை விளக்கிய திரு தன்கர், “ஜனநாயகம் அமைப்புகளில் மட்டுமல்ல, அடிப்படை மதிப்புகளின் மீதும் வளர்கிறது.....அது வெளிப்பாடு மற்றும் உரையாடலின் நுட்பமான சமநிலையை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த இரட்டை சக்திகள், வெளிப்பாடு மற்றும் உரையாடல், ஜனநாயக உயிர்ச்சக்தியை வடிவமைக்கின்றன. இதன் முன்னேற்றம் தனிப்பட்ட நிலைகளால் அளவிடப்படுவதில்லை, மாறாக பரந்த சமூக நலன்களால் அளவிடப்படுகிறது. இந்தியாவின் ஜனநாயகப் பயணம், பன்முகத்தன்மை மற்றும் பரந்த மக்கள்தொகைத் திறன் ஆகியவை தேசிய முன்னேற்றத்தைத் தூண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. நாம் முன்னோக்கி செல்லும் பாதையை பட்டியலிடுகையில், ஜனநாயக ஆரோக்கியமும் பொருளாதார உற்பத்தியும் தேசிய வளர்ச்சியில் பிரிக்க முடியாத பங்காளிகள் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்’’ என்று கூறினார்.
இன்று புது தில்லியில் உள்ள ஐசிடபிள்யுஏ-வில் இந்திய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு கணக்குகள் மற்றும் நிதி சேவைகளின் 50வது நிறுவன தின நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசிய திரு தன்கர், “நம்மில் உள்ள நான் என்னும் தன்முனைப்பு அடக்க முடியாதது, அதனைக் கட்டுப்படுத்த நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். தன்முனைப்பு யாருக்கும் சேவை செய்யாது, ஆனால் அதை வைத்திருக்கும் நபரை சேதப்படுத்துகிறது "எனக் கூறினார்.
சுய பரிசோதனையின் அவசியத்தை வலியுறுத்திய திரு தன்கர், “நண்பர்களே, சுய பரிசோதனை மிகவும் முக்கியமானது. ஒரு தனிநபரையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ நல்ல நிலைக்கு கொண்டுவருவதற்கான உறுதியான வழி. நவீன அரசு ஊழியர்கள் தொழில்நுட்ப அறிவாளிகளாகவும், மாற்றத்தை எளிதாக்குபவர்களாகவும், பாரம்பரிய நிர்வாக எல்லைகளைத் தாண்டியவர்களாகவும் இருக்க வேண்டும். சேவையே நமது அடிக்கல்லாக உள்ளது. நிர்வாகிகள், நிதி ஆலோசகர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் போன்ற உங்கள் பாத்திரங்கள் நாளைய சவால்களைச் சந்திக்கும் வகையில் உருவாக வேண்டும். இந்த பரிணாமம், சேவை வழங்கலை பாரம்பரிய முறைகளிலிருந்து அதிநவீன தீர்வுகளுக்கு மாற்ற வேண்டும்’’ என்று ௶லிநுறுத்தினார்.
“நாம் இன்னொரு தொழிற்புரட்சியின் உச்சத்தில் இருக்கிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நம்மை ஆக்கிரமித்துள்ளன. நம் வீட்டில், அலுவலகத்தில், எல்லா இடங்களிலும் அது நம்முடன் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், மெஷின் லேர்னிங், பிளாக்செயின் போன்றவை அவை. சவாலை நாம் சமாளிக்க வேண்டும், சவாலை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் அவரவர் லட்சியங்களுடன் தடையின்றி இணைக்க வேண்டும். மற்ற சேவைகள் உங்கள் முறையைப் பின்பற்ற முடியும் என்பதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது சேவைகள் இன்னும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அடிப்படை ஒருமைப்பாட்டைப் பேணுவதன் மூலம் அவர்கள் விரைவான தொழில்நுட்ப சவால்கள், சமூக சவால்களுக்கு மாற்றியமைக்க வேண்டும். தேசத்தைக் கட்டியெழுப்பும் நமது சிறப்புரிமை இப்போது அதிகப் பொறுப்பைக் கொண்டுள்ளது. நாம், வளர்ந்த தேசத்தின் பார்வையை 2047 இல் உணர வேண்டும்," என்று அவர் கூறினார்.
“ குடும்பத்தில் அல்லது அமைப்பில் எப்போதும் பிரச்சினைகள் இருக்கும். சிக்கல்கள் இயற்கையானவை. தோல்வியைப் போல முன்னோக்கிச் செல்ல சிக்கல்கள் நமக்கு உதவுகின்றன. தோல்வி என்பது பின்னடைவு அல்ல, அடுத்த முறை வெற்றியை அடைய அது உங்களைத் தூண்டுகிறது” என்று அவர் கூறினார்.
டிஜிட்டல் பிளவைக் குறைக்க அரசு ஊழியர்களை வலியுறுத்திய திரு தன்கர், “கிராமப்புற தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதற்கான புதுமையான நிதி மாதிரிகள் மூலம் டிஜிட்டல் பிளவைக் குறைப்பதில் கவனம் செலுத்துங்கள். இது அமைச்சரின் முன்னுரிமை என்பதைக் குறிப்பிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உலகின் மிகப்பெரிய இளைஞர் மக்கள்தொகையுடன், உலகில் உள்ள அனைவருக்கும் அது பொறாமையாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை பங்கீடு முன்னோடியில்லாத வாய்ப்புகளை வழங்குகிறது. உங்கள் டிஜிட்டல் முன்முயற்சிகள் திறமையான மேம்பாடு மற்றும் டிஜிட்டல் தொழில்முனைவு மூலம் இந்த இளம் திறமைக் குழுவைப் பயன்படுத்த வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.
ஸ்ரீ மாண்புமிகு தொலைத் தொடர்பு துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் டிஜிட்டல் தொலைத்தொடர்பு ஆணையத்தின் உயரதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
----
PKV/DL
(Release ID: 2084437)
Visitor Counter : 44