மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
பெண் தலைவர்களுக்கான ஒருநாள் பயிலரங்கு
Posted On:
13 DEC 2024 2:24PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், புதுதில்லியில் பல்கலைக்கழக மானிய குழு ஏற்பாடு செய்த பெண் தலைவர்களுக்கான ஒருநாள் பயிலரங்கை தொடங்கி வைத்தார். இந்தப் பயிலரங்கில் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்க எட்டும் வகையில், பயிலரங்குகள் நடத்தப்பட உள்ளன. மத்திய வடகிழக்கு பிராந்திய கல்வி மற்றும் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார், அந்த அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் குமார், பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஷ் குமார், மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஏரோநாட்டிகல் அமைப்பின் தலைமை இயக்குனர் டாக்டர் ராஜலட்சுமி மேனன், பல்கலைக்கழக மானியக் குழு துணைத்தலைவர் பேராசிரியர் தீபக் குமார் ஸ்ரீவஸ்தவா, தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயக்குநர், பேராசிரியர் ரங்கன் பானர்ஜி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த பாடத்திட்டம், கல்வி கற்பதில் ஒவ்வொரு நிலையிலும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை வலியுறுத்துவதாக கூறினார். உயர்கல்வி பயில்வதில் பெண்களின் ஆர்வம் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார். பெண்களின் தலைமைப் பண்பை ஊக்குவித்து சிறப்பாக செயல்பட வைப்பதே இந்தபு பயிலரங்கின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெண்களின் மன வலிமை, நெகிழ்வுத் தன்மை, நம்பிக்கை போன்ற குணநலன்கள் இந்திய நாகரீகத்தின் மாண்பை எடுத்துக் காட்டுவதாக உள்ளதென்று திரு தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் முன்னேற்றம் என்பதிலிருந்து பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற மாற்றத்தை உருவாக்குவதில் மத்திய அரசின் முன்னெடுப்புகளுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2084113
----
VL/SV/KPG/RR/DL
(Release ID: 2084246)
Visitor Counter : 35