உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குளிர்பதன சங்கிலி திட்டங்கள்

Posted On: 11 DEC 2024 11:49AM by PIB Chennai

பிரதமரின் வேளாண் மேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த குளிர்பதன சங்கிலி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உள்கட்டமைப்பு (குளிர்பதன சங்கிலி திட்டம்) திட்டத்தின் கீழ், 2008-ம் ஆண்டு முதல் தற்போது வரை (31.10.2024) மொத்தம் 399 குளிர்பதன சங்கிலி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 284 குளிர்பதன சங்கிலி திட்டங்கள் முடிக்கப்பட்டு வணிக செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

குளிர்பதன சங்கிலி திட்டம் தேவை சார்ந்தது என்பதால், அமைச்சகத்தின் இணையதளத்தில் விருப்ப வெளிப்பாடு வெளியிடுவதன் மூலம் நிதி இருப்பின் அடிப்படையில் ஏற்படும் கடினமான சூழல்கள் உட்பட நாடு முழுவதும் அவ்வப்போது இத்திட்டத்தின் கீழ் முன்மொழிவுகள் கோரப்படுகின்றன. மேலும் இது பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் முன்னணி தேசிய மற்றும் மாநில செய்தித்தாள்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுகிறது. சிறு விவசாயிகள் உட்பட தனிநபர்கள் மற்றும் வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள்/ வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்கள் / அரசு சாரா அமைப்புகள் / பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர். இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை ரூ.2366.85 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.100.70 கோடி உட்பட நாடுமுழுவதிலும் பல்வேறு மாநிலங்களுக்கு ரூ.2,366.85 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய உணவு பதனப்படுத்துதல் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டு இத்தகவலை தெரிவித்தார்.

*****

SV/KPG/IR/DL


(Release ID: 2083516) Visitor Counter : 7