மத்திய பணியாளர் தேர்வாணையம்
குடிமைப் பணி (முதன்மை) தேர்வு, 2024 – எழுத்துத் தேர்வு முடிவு
Posted On:
10 DEC 2024 10:52AM by PIB Chennai
2024, செப்டம்பர் 20 முதல் 29 வரை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணி (முதன்மை) தேர்வு, 2024 முடிவுகளின் அடிப்படையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவு எண்களைக் கொண்ட விண்ணப்பதாரர்கள், இந்திய ஆட்சிப் பணி , இந்திய வெளியுறவுப் பணி, இந்தியக் காவல் பணி மற்றும் பிற மத்திய பணிகளுக்கு (குரூப் 'ஏ' மற்றும் குரூப் 'பி') தேர்ச்சி பெறுவதற்கான ஆளுமைத் தேர்வுக்கு (நேர்காணல்) தகுதி பெற்றுள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதி / இட ஒதுக்கீடு தொடர்பான அசல் சான்றிதழ்களான வயது, கல்வித் தகுதி, சமூகம், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், பெஞ்ச்மார்க் மாற்றுத்திறனாளி மற்றும் டிஏ படிவம் போன்ற ஆவணங்களை ஆளுமைத் தேர்வின் (நேர்காணல்) போது சமர்ப்பிக்க வேண்டும். எனவே, மேற்கண்ட ஆவணங்களை தங்களுடன் தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எஸ்சி/எஸ்டி/ஓபிசி/இடபிள்யுஎஸ்/பெஞ்ச்மார்க் மாற்றுத்திறனாளி/முன்னாள் ராணுவத்தினர் போன்ற பிரிவுகளுக்குக் கிடைக்கும் இடஒதுக்கீடு / தளர்வு பலன்களை விரும்பும் விண்ணப்பதாரர்கள், குடிமைப் பணி (முதன்மை) தேர்வு, 2024 விண்ணப்பத்தின் இறுதி தேதிக்குள் அதாவது 06.03.2024க்குள் வழங்கப்பட்ட அசல் சான்றிதழ்(களை) சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பதாரர்களின் ஆளுமைத் தேர்வுகள் நடத்தப்படும் (நேர்காணல்கள்) தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். நேர்முகத் தேர்வு தோல்பூர் ஹவுஸ், ஷாஜகான் சாலை, புது தில்லி -110069 என்ற முகவரியில் உள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். அதற்கேற்ப ஆளுமைத் தேர்வுகள் (நேர்காணல்கள்) அட்டவணை வெளியிடப்படும். விண்ணப்பதாரர்களின் ஆளுமைத் தேர்வுகளின் மின்னணு அழைப்பாணை கடிதங்கள் (நேர்காணல்கள்) உரிய நேரத்தில் கிடைக்கும். அவற்றை https://www.upsc.gov.in & https://www.upsconline.in என்ற ஆணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம் . மின்னணு அழைப்பாணை கடிதங்களை பதிவிறக்கம் செய்ய முடியாத விண்ணப்பதாரர்கள் உடனடியாக கடிதம் மூலமாகவோ அல்லது 011-23385271, 011-23381125, 011-23098543 ஆகிய தொலைபேசிகளில் தொடர்பு கொண்டோ அல்லது தொலைநகல் இலக்கம் 011-23387310, 011-23384472 மூலமாகவோ அல்லது (csm-upsc[at]nic[dot]in) என்ற மின்னஞ்சல் மூலமாகவோ ஆணைக்குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். ஆணைக்குழு ஆளுமைத் தேர்வுகளுக்கு (நேர்காணல்கள்) அழைப்பாணைக் கடிதங்களை அஞ்சலில் அனுப்பாது.
விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்கப்படும் நேர்முகத் தேர்வின் (நேர்காணல்) தேதி மற்றும் நேரத்தை மாற்றுவதற்கான எந்த கோரிக்கையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படாது.
ஆளுமைத் தேர்வுகளுக்கு (நேர்காணல்கள்) தகுதி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் தங்கள் விரிவான விண்ணப்பப் படிவம்-II-ஐ கட்டாயமாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக, குடிமைப் பணி தேர்வு, 2024 விதிகளில் பின்வரும் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன:
தேர்வின் நேர்காணல் / ஆளுமைத் தேர்வு தொடங்குவதற்கு முன்பு, ஒரு விண்ணப்பதாரர் குடிமைப் பணி தேர்வு-2024-ல் பங்கேற்கும் சேவைகளுக்கான முன்னுரிமை வரிசையை மட்டுமே கட்டாயமாக குறிப்பிட வேண்டும். மேலும் இறுதியில் தேர்வு செய்யப்பட்டால், ஆன்லைன் விரிவான விண்ணப்ப படிவம்-II -ல் குறிப்பிட வேண்டும். ஓபிசி இணைப்பு (ஓபிசி பிரிவினருக்கு மட்டும்) மற்றும் இடபிள்யுஎஸ் இணைப்பு (இடபிள்யுஎஸ் பிரிவினருக்கு மட்டும்) கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு அப்பால் விரிவான விண்ணப்ப படிவம்-II அல்லது ஆதரவான ஆவணங்களை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்படுவது அனுமதிக்கப்படாது. மேலும் குடிமைப் பணி தேர்வு-2024 க்கான வேட்புமனுவை ரத்து செய்ய வழிவகுக்கும். ஒரு வேட்பாளர் உயர் கல்வி, பல்வேறு துறைகளில் சாதனைகள், சேவை அனுபவம் போன்றவற்றின் கூடுதல் ஆவணங்கள் / சான்றிதழ்களையும் பதிவேற்றலாம்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் சேவை ஒதுக்கீட்டிற்கு பரிந்துரை செய்யும் பட்சத்தில், இணையதள விரிவான விண்ணப்பப் படிவம்-II-ல் விண்ணப்பதாரரால் விருப்பம் தெரிவிக்கப்பட்ட சேவைகளில் ஏதேனும் ஒரு பணிக்கு ஒதுக்குவதற்கு விண்ணப்பதாரர் அரசால் பரிசீலிக்கப்படுவார். ஒரு வேட்பாளர் சமர்ப்பித்த சேவைகளுக்கான முன்னுரிமைகளில் எந்த மாற்றமும் அனுமதிக்கப்படாது. சேவைகளில் எதற்கும் முன்னுரிமை குறிப்பிடப்படவில்லை என்றால், விண்ணப்பதாரர் சேவை ஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்பட மாட்டார்.
தேர்வு-2024, ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ் -ஐ தங்கள் சேவை முன்னுரிமையாக குறிப்பிட விரும்பும் விண்ணப்பதாரர்கள் அனைத்து மண்டலங்கள் மற்றும் கேடர்களை, அவர்களின் ஆன்லைன் விரிவான விண்ணப்ப படிவம்-II-ல் முன்னுரிமை வரிசையில் குறிப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேற்கூறிய தேர்வு விதிகளின்படி, இந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் விரிவான விண்ணப்ப படிவம்-II-ஐ ஆன்லைனில் மட்டுமே பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும், இது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (https://upsconline.nic.in) 2024, டிசம்பர் 13 முதல் டிசம்பர் 19 மாலை 6:00 மணி வரை கிடைக்கும். சமர்ப்பிக்கத் தவறினால் அவரது வேட்புமனு ரத்து செய்யப்படும். இது தொடர்பாக ஆணையத்தால் எந்தக் கடிதப் போக்குவரத்தும் ஏற்றுக்கொள்ளப்படாது. அத்தகைய வேட்பாளர்களுக்கு இ-சம்மன் கடிதம் வழங்கப்படாது.
விரிவான விண்ணப்ப படிவம்-I & விரிவான விண்ணப்ப படிவம் -II-ல் கொடுக்கப்பட்டுள்ள எந்த வகையான மாற்றத்திற்கான கோரிக்கையும் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது. எவ்வாறாயினும், தேவைப்படும் இடங்களில், வேட்பாளர்கள் தங்கள் முகவரி / தொடர்பு விவரங்களில் மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் மட்டுமே, இந்த செய்திக்குறிப்பை வெளியிட்ட 7 நாட்களுக்குள் கடிதம், மின்னஞ்சல் (csm-upsc[at]nic[dot]in) அல்லது தொலைநகல் மூலம் உடனடியாக ஆணையத்திற்கு தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அனைத்து தகுதியான விண்ணப்பதாரர்களும் ஆன்லைனில் சான்றளிப்பு படிவத்தை பூர்த்தி செய்து அதை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும், இது ஆளுமைத்தேர்வு (நேர்காணல்கள்) தொடங்கிய தேதியிலிருந்து முடிவடையும் வரை பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் ( https:// cseplus.nic.in/Account/Login) கிடைக்கும். எனவே, ஆளுமைத் தேர்வுக்கு (நேர்முகத் தேர்வு) தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஆன்லைனில் சான்றளிப்பு படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். சான்றளிப்பு படிவம் தொடர்பான ஏதேனும் கேள்வி / விளக்கத்திற்கு, விண்ணப்பதாரர்கள் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையை மின்னஞ்சல் முகவரி : doais1[at]nic[dot]in, usais-dopt[at]nic[dot]in, அல்லது தொலைபேசி எண்கள் 011-23092695/23040335/ 23040332-ல் தொடர்பு கொள்ள வேண்டும்.
அனைத்து தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்களும் இறுதி முடிவு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் [ஆளுமைத் தேர்வு (நேர்காணல்) நடத்திய பிறகு] தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2082569
*****
TS/SMB/KV/KR
(Release ID: 2082626)
Visitor Counter : 36