பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
நாடு முழுவதும் 85 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
06 DEC 2024 8:01PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 85 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்கவும், கர்நாடகா ஷிவமோகா மாவட்டத்தில் தற்போதுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியை விரிவுபடுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
85 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிறுவுவதற்கும், தற்போதுள்ள 1 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை விரிவுபடுத்துவதற்கும் மொத்தம் ரூ. 5872.08 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மூலதன செலவினம் ரூ. 2862.71 கோடி மற்றும் செயல்பாட்டு செலவினம் ரூ. 3009.37 கோடி அடங்கும்.
தற்போதைய நிலவரப்படி, வெளிநாடுகளில் மாஸ்கோ, காத்மாண்டு, தெஹ்ரான் ஆகிய 03 கேந்திரிய வித்யாலயாக்கள் செயல்படுகின்றன. இவை உட்பட மொத்தம் 1256 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் மொத்தம் 13.56 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
தற்போது கேந்திரிய வித்யாலயாக்களில் 960 மாணவர்கள் என்ற அடிப்படையில் மாணவர் எண்ணிக்கை உள்ளது. புதிதாக தொடங்கப்படும் கேந்திரிய வித்யாலயாக்கள் மூலம் 82560 மாணவர்கள் பயனடைவார்கள். நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி, ஒரு முழுமையான கேந்திரிய வித்யாலயா பள்ளி 63 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. அதன்படி, 85 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே உள்ள ஒரு கேந்திரிய வித்யாலயா வித்யாலயா விரிவாக்கம் மூலம் மொத்தம் 5,388 நேரடி நிரந்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
புதிதாக கேந்திரிய வித்யாலயாக்களைத் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் எண்ணிக்கையும் பின்வருமாறு:
தமிழ்நாட்டில் 2 பள்ளிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேனியிலும், தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியிலும் தலா ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைக்க ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தவிர ஆந்திரா 8, அருணாச்சலப் பிரதேசம் 1, அசாம் 1, சத்தீஸ்கர் 4, குஜராத் 3, இமாச்சலப் பிரதேசம் 4, ஜம்மு காஷ்மீர் 13, ஜார்க்கண்ட் 2, கர்நாடகா 3, கேரளா 1, மத்தியப் பிரதேசம் 11, மகாராஷ்டிரா 3, தில்லி 1, ஒடிசா 8, ராஜஸ்தான் 9, திரிபுரா 2, உத்தரப் பிரதேசம் 5, உத்தராகண்ட் 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
***
PLM /DL
(Release ID: 2081873)
Visitor Counter : 40
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali-TR
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam