கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
வடகிழக்கு பிராந்தியத்தின் இன்றைய வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியே காரணம் -அமைச்சர் சர்பானந்த சோனாவால்
Posted On:
06 DEC 2024 2:01PM by PIB Chennai
வடகிழக்குப் பிராந்தியத்தின் ஆற்றலுக்கு புத்துயிரூட்டுதல், மற்றும் புதுப்பிக்கும் அரசியல் உத்தியின் ஒரு பகுதியாக சிறந்த ஆளுமை மற்றும் வளர்ச்சி அரசியலின் முக்கிய பிரிவுகளில் கவனம் செலுத்தியதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் பாராட்டு தெரிவித்தார். மோடி அரசின் மாற்றம் தரும் பத்தாண்டு கால ஆட்சி வடகிழக்கு இந்தியாவில் ஒரு புதிய சக்தியை எவ்வாறு தூண்டியுள்ளது என்பதையும் வடகிழக்கைச் சேர்ந்த மூத்த தலைவரான அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் எடுத்துரைத்தார். ஏனெனில் இது தற்சார்பாக மாறும் ஒரு நாட்டின் தேடலுக்கான வளர்ச்சி எந்திரத்தை இயக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முக்கிய சாதனைகளை முன்னிலைப்படுத்தி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், "அழகான வடகிழக்கு பிராந்தியம் இயற்கை அன்னையால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் வரை மத்தியில் அடுத்தடுத்து வந்த அரசுகளால் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டும்இருந்தது. செயலற்ற தன்மை, ஊழல் மற்றும் அறியாமையில் சிக்கித் தவித்த அரசுகளின் பல தசாப்தங்களுடன் ஒப்பிடும்போது, பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் இந்த பிராந்தியத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பத்தாண்டு மாற்றம் வடகிழக்குப் பகுதியில் புதிய சக்தியைத் தூண்டியுள்ளது. தற்சார்பு இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையை நனவாக்கும் முயற்சியில் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த தங்கள் சகோதரர்களுடன் இணைந்து பணியாற்றுவதால், பெருமையோடும் நம்பிக்கையோடும் இருக்கும் இந்த பிராந்திய மக்கள் இனி புறக்கணிக்கப்படமாட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்திய இந்தியாவின் வளர்ச்சி இயந்திரமாக வடகிழக்கை புத்துயிர் பெறச் செய்வதற்கான உத்தி, நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலை மையமாகக் கொண்டுள்ளது. தெளிவான நோக்கத்துடனும் கடின உழைப்புடனும் வெற்றிக்கான ஆர்வத்துடனும் மேற்கொள்ளப்படும் இந்த இரட்டை அணுகுமுறை, பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் மக்களும் தங்கள் வீட்டு வாசலில் நலன்தரும் சேவைகளை அனுபவிக்கின்றனர். 2014-ம் ஆண்டுக்கு முன்னர் வடகிழக்கின் பெரும்பாலான மக்களுக்கு இது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இன்று, மாற்றம், வளர்ச்சி, வாழ்க்கைத் தரத்தில் உயர்வு ஆகியவற்றைப் பெற்றுள்ளோம்.
பிராந்தியத்தின் முக்கியமான வளர்ச்சிகளை எடுத்துரைத்த மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு வடகிழக்கு பிராந்தியம் முன்னுரிமையானதாக உள்ளது. 2014 முதல், இப்பகுதி பட்ஜெட் ஒதுக்கீட்டில் 300% அதிகரிப்பைப் பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டில் ரூ. 36,108 கோடியிலிருந்து, 2023-24 நிதியாண்டில் ரூ. 94,680 கோடியை எட்டியுள்ளது. உள்கட்டமைப்பைப் பொறுத்தவரை, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் 28% அதிகரித்துள்ளது. 2014 வரை, இப்பகுதியில் 80 தேசிய நெடுஞ்சாலைகள் இருந்தன, அவை 2023 க்குள் 103 ஆக அதிகரித்தன. உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட ஒதுக்கீடு ரூ. 94 கோடியிலிருந்து ரூ. 2,491 கோடியாக 26 மடங்கு அதிகரித்துள்ளது .
ஒவ்வொரு ஆண்டும் 193 கி.மீ க்கும் அதிகமான ரயில் பாதைகள் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் தகவல் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் ரயில்வே வசதி விரிவடைந்துள்ளது. இப்பகுதிக்கான ரயில்வே பட்ஜெட் 370% அதிகரித்துள்ளது. இந்தப் பிராந்தியத்தில் அகல ரயில் பாதையை 100% மின்மயமாக்கியுள்ளோம். 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், இப்பகுதியில் 9 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் 17 விமான நிலையங்கள் உள்ளன. இதன் விளைவாக, இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வாரத்திற்கு 113% விமானப் பயணத்தை அதிகரித்துள்ளனர். பிராந்தியத்தின் தொலைதூர மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவதைப் பொறுத்தவரை, 7000 க்கும் அதிகமான கிராமங்களில் குழாய் மூலம் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தசாப்தத்தில், இப்பகுதியில் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 39% அதிகரித்துள்ளது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் நோக்கில், 1.55 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலம் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4,016 கிலோமீட்டருக்கும் அதிகமான சாலை திட்டங்கள் நடந்து வருகின்றன. 4 ஜி இணைப்பு ஏறத்தாழ வடகிழக்கின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைந்துள்ளது என்று அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2081445
*****
TS/SMB/KV/KR
(Release ID: 2081619)