குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பூரியில் நடைபெற்ற கடற்படை தின விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

Posted On: 04 DEC 2024 7:25PM by PIB Chennai

ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் டிசம்பர் 4, 2024 அன்று நடைபெற்ற கடற்படை தின கொண்டாட்டத்தில்  குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு  பங்கேற்றார்.

தமது உரையின்போது, கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படையின் அனைத்து வீரர்களுக்கும் குடியரசுத்தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.  1971, டிசம்பர் 4-ஆம் தேதி நிகழ்ந்த போரில் நமது வெற்றியைக் கொண்டாடுகிறோம், தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக கடற்படை வீரர்கள் செய்த தன்னலமற்ற சேவை மற்றும் உயர்ந்த தியாகத்தை நினைவுகூருகிறோம் என்று அவர் கூறினார். இந்திய கடற்படையின் அனைத்து பணியாளர்களுக்கும் இந்தியா கடன்பட்டுள்ளதுமரியாதையுடனும் தைரியத்துடனும் தேசத்திற்கு சேவை செய்ததற்காக ஒவ்வொரு இந்தியரும் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறார்கள் என்றார், அவர்.

ஒரு சிறந்த கடல்சார் நாடாக மாறுவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும்  இந்தியாவின் புவியியல் நமக்கு வழங்கியுள்ளது என்று குடியரசுத்தலைவர் கூறினார். நீண்ட கடற்கரை, தீவு பிரதேசங்கள் மற்றும் வளர்ந்த கடல் உள்கட்டமைப்பு ஆகியவை 5,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து கடற்கரை மற்றும் பெருங்கடல்களுக்கு அப்பால் இந்தியாவின் கடல் நடவடிக்கைகளை ஊக்குவித்தன.  ஒரு புகழ்பெற்ற கடல்சார் பாரம்பரியம் மற்றும் திரும்பிப் பார்க்க வேண்டிய வரலாறு மற்றும் எதிர்நோக்குவதற்கான வாக்குறுதி நிறைந்த எதிர்காலம் ஆகியவற்றுடன், இந்தியா எப்போதும் ஒரு வலுவான கடல்சார் தேசமாக இருந்து வருகிறது. 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக நாம் உயர்வதற்கு அவசியமான கடல்சார் பாதுகாப்பை இந்திய கடற்படை தொடர்ந்து உறுதி செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

'மகளிர் சக்தி'க்கு பொருத்தமான வளர்ச்சிக்கான வழிகளை ஏற்படுத்தித் தருவதில் கடற்படையின் முன்னோடி முயற்சிகளை குடியரசுத்தலைவர் பாராட்டினார். பெண் அக்னிவீரர்களை சேர்த்த முதல் சேவை கடற்படை என்று அவர் குறிப்பிட்டார். 'நாவிகா சாகர் பரிக்கிரமா II' இன் ஒரு பகுதியாக ஐ.என்.எஸ்.வி தாரிணியில் உலகைச் சுற்றி வரும் இரண்டு பெண் கடற்படை அதிகாரிகளான லெப்டினன்ட் கமாண்டர் தில்னா கே மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் ரூபா ஆகியோர் இந்த புதிய முன்னுதாரணத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080818

  

***


TS/BR/RR


(Release ID: 2080963) Visitor Counter : 61