சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
அணுகக்கூடிய இந்தியா பிரச்சாரமானது அனைவருக்கும் அணுகல் வசதி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது
Posted On:
02 DEC 2024 8:47PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், அணுகக்கூடிய இந்தியா பிரச்சாரம், மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடி முயற்சியாக உருவெடுத்துள்ளது. 2015 டிசம்பர் 3 அன்று தொடங்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டம், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டுடன் இணைந்து, இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்க்கிய அணுகல் பற்றிய கதையாடலை மாற்றியுள்ளது.
அனைவருக்கும் அணுகலை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள 9 ஆண்டுகளை அணுக்ககூடிய இந்தியாபிரச்சாரம் கொண்டாடும் நிலையில், அதன் மூன்று தூண்களாக விளங்கும் சாதனைகள் பின்வருமாறு:
1. கட்டமைக்கப்பட்ட சூழல்:
• 1671 அரசு கட்டடங்களுக்கு அணுகல் வசதிகளுக்கான தணிக்கைகள் நடத்தப்பட்டன.
• 1314 கட்டமைப்புகளுக்கான மறுசீரமைப்பு உட்பட, 1748 அரசு கட்டடங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட அணுகல் அம்சங்கள்.
• 35 சர்வதேச மற்றும் 55 உள்நாட்டு விமான நிலையங்கள், வளைவுகள், அணுகக்கூடிய கழிப்பறைகள் மற்றும் பிரெய்லி அமைப்புகளுடன் இயங்குகின்றன.
2. போக்குவரத்து:
• 709 ரயில் நிலையங்கள் முழுமையாக அணுகக்கூடிய வசதிகளைப் பெற்றுள்ளவை, மேலும் 4068 ஓரளவு அணுகக்கூடியவை.
• 8,695 பேருந்துகள் முழுமையாக அணுகக்கூடியவை; 42,348 பேருந்துகள் ஓரளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
• 24 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அணுகக்கூடிய பேருந்து நிலையங்கள் எண்ணிக்கை 3120 ஆக அதிகரித்தன.
3. தகவல் மற்றும் தொடர்பு:
• 95 மத்திய அரசு வலைத்தளங்கள் அணுகலுக்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன.
• 676 மாநில / யூனியன் பிரதேச அரசு வலைத்தளங்கள் அணுகக்கூடியவை.
குறிப்பிடத்தக்க முயற்சிகள்:
• சுகம்யா பாரத் செயலி:அணுகல் சவால்களை கிரவுட்சோர்ஸ் செய்வதற்கும் உடனடி தீர்வை உறுதி செய்வதற்கும் பயனர் நட்பு மொபைல் தளம் தொடங்கப்பட்டது.
• இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் :சைகை மொழி பயிற்சி மூலம் 1,000- க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அதிகாரம் அளித்தது மற்றும் அணுகக்கூடிய தொலைக்காட்சி உள்ளடக்கத்திற்கான தரநிலைகளை உருவாக்கியது.
• அணுகக்கூடிய தேர்தல்:இந்திய தேர்தல் ஆணையம் தனது 10.5 லட்சம் வாக்குச்சாவடிகளுக்கு 100% அணுகலை வழங்கியது.
• விளையாட்டு சிறப்பு:குவாலியரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு மையம் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குகிறது.
அமைச்சகங்களில் தாக்கம்:
• கல்வி: பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் இப்போது சாய்வுதளம், அணுகக்கூடிய கழிப்பறைகள் மற்றும் தள்ளுவண்டி வசதிகள் உள்ளன.
• நிதி உள்ளடக்கம்:நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவை நிதி அமைப்புகளுக்கான டிஜிட்டல் அணுகலை முன்னெடுத்து வருகின்றன.
• கலாச்சார பிரதிநிதித்துவம்:இந்திய திரைப்பட விழாக்களில் இப்போது அணுகக்கூடிய திரையிடல்கள், இந்திய சைகை மொழி விளக்கங்கள் ஆகியவை இடம் பெறுகின்றன.
முன்னோக்கி பார்க்கும் உத்திகள்
அணுக்ககூடிய இந்தியா பிரச்சாரத்தின் அடுத்த கட்ட நோக்கங்கள்:
• மீதமுள்ள அமைச்சகங்கள் மற்றும் துறைகள் சார்ந்த அணுகல் தரங்களைஉருவாக்குதல்.
• 500 கூடுதல் அரசு வலைத்தளங்களை முழுமையாக அணுகச் செய்தல்.
• கட்டிடக்கலை கவுன்சிலுடன் இணைந்து அணுகல் தணிக்கையாளர்களுக்கு பயிற்சி அளித்தல்.
• ஐஐடி காரக்பூர் மற்றும் ஏஐசிடிஇ உடன் இணைந்து பி.டெக், பி.பிளான்,பி.ஆர்க் மாணவர்களுக்குசிறப்பு அணுகல் படிப்புகளைஉருவாக்குதல்.
நெகிழ்தன்மையான எதிர்காலத்தை உருவாக்குதல்:
பிரச்சாரத்தின் முழுமையான அணுகுமுறை - உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் சமூக அணுகுமுறைகளைத் தழுவுதல் - 'அணுகக்கூடிய இந்தியா, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற அரசின் உறுதிப்பாட்டை உள்ளடக்கியது. சிப்டாவின் கீழ், 'தடையற்ற சூழலை உருவாக்குதல்' என்ற துணைத் திட்டமாக இந்தப் பிரச்சாரம் மாறும்போது, இந்தியா முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கான உள்ளடக்கம், சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை இது தொடர்ந்து வழங்கும். இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பயணம், யாரையும் பின்தங்க வைக்க மாட்டோம் என்ற இந்தியாவின் உறுதிமொழிக்கு ஒரு சான்றாகும்.
***
TS/PKV/KV
(Release ID: 2080538)
Visitor Counter : 22