தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பிரகதி: மேம்பாடு & பொறுப்புடைமைக்கான உந்துதல்
Posted On:
03 DEC 2024 6:23PM by PIB Chennai
கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன், ஆக்ஸ்போர்டின் சயீத் பிசினஸ் ஸ்கூல் நடத்திய 'முடக்கம் முதல் வளர்ச்சி வரை: இந்தியாவின் பிரகதி சூழலியல் முன்னேற்றத்தை தலைமைத்துவம் எவ்வாறு சாத்தியமாக்குகிறது' என்ற தலைப்பிலான முன்னோடி ஆய்வு இந்தியாவின் டிஜிட்டல் ஆளுகை சூழலில் ஒரு மாற்றுசக்தியாக பிரகதி (புரோ-ஆக்டிவ் கவர்னன்ஸ் அண்ட் டைம்லி இம்ப்ளிமென்ட்டேஷன்) எவ்வாறு கவனத்தை ஈர்த்துள்ளது என்பதை விளக்குகிறது. இந்தப் புதுமையான தளம் மார்ச் 2015-இல் தொடங்கப்பட்டதிலிருந்து 205 பில்லியன் டாலர் மதிப்புள்ள 340 க்கும் மேற்பட்ட முக்கியமான திட்டங்களை விரைவுபடுத்த உதவியுள்ளது என்பதை ஆய்வு வெளிப்படுத்துகிறது, இது நாடு முழுவதும் விரைவான உள்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகளில் அதன் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பு மூலம் பிரகதியின் புதுமையான அணுகுமுறை நிர்வாகத்தில் உள்ள இடைவெளிகளை எவ்வாறு நிரப்பியுள்ளது என்பதை இந்த தாக்கம் எடுத்துக்காட்டுகிறது. டிஜிட்டல் தரவு மேலாண்மை, காணொலி கலந்தாய்வு மற்றும் புவி-இடஞ்சார்ந்த மேப்பிங் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், இது பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே தடையற்ற ஒத்துழைப்பை சாத்தியமாக்குகிறது. இந்த நேரடி ஈடுபாடு, பிரச்சினைகள் நிகழ்நேரத்தில் தீர்க்கப்படுவதை உறுதி செய்கிறது, பிரதமர் தனிப்பட்ட முறையில் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து இடர்பாடுகளை அகற்றுகிறார். இத்தகைய முழுமையான அணுகுமுறை பொறுப்புணர்வு மற்றும் செயல்திறன் கலாச்சாரத்தை உருவாக்கி, பிரகதியை கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் புதுமையான ஆளுகைக்கான முன்மாதிரியாக மாற்றியுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத திறமையுடன் பிரச்சினைகளை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும், தீர்க்கவும் பிரதமருக்கு பிரகதி அதிகாரம் அளிக்கிறது. ஆளுகையை ஒழுங்குபடுத்துவதற்கான தளத்தின் அணுகுமுறை முடிவெடுப்பதில் புரட்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், மின்-ஆளுமை மற்றும் நல்லாட்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது என்று ஆய்வில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
2015-இல் தொடங்கப்பட்டதிலிருந்து, பிரகதி இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் சமூகத் துறை வளர்ச்சியை மாற்றியமைப்பதில் ஒரு கிரியா ஊக்கியாக இருந்து வருகிறது. சீரிய தலைமை, உத்திசார் திட்டத் தேர்வு மற்றும் வலுவான டிஜிட்டல் ஆளுகை கட்டமைப்பு மூலம், தளம் பல்வேறு உயர் முன்னுரிமை திட்டங்களில் சிக்கலான சவால்களை எதிர்கொண்டுள்ளது. பிரகதி, எவ்வாறு உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முன்னேற்றத்தை துரிதப்படுத்தியது, இடர்பாடுகளைத் தீர்த்தது, மாநிலங்களிடையே ஒத்துழைப்பை வளர்த்தது மற்றும் முக்கிய சமூக முன்முயற்சிகளை ஆதரித்தது, நாட்டின் வளர்ச்சிப் பாதையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியது என்பதை இந்த ஆய்வு ஆராய்கிறது.
இந்த ஆய்வு, டிஜிட்டல் ஆளுகைக்கான உருமாறும் மாதிரியாக பிரகதியை எடுத்துக்காட்டுவதுடன், உள்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதில் அதன் செயல்திறனைக் காட்டுகிறது. தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலமும், ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலமும், பொறுப்புணர்வை உறுதி செய்வதன் மூலமும், அதிகாரத்துவ தடைகளை சமாளிப்பதிலும், தேசிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதிலும் பிரகதி முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த ஆய்விலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவுத் திறன்கள், மிகவும் திறமையான ஆளுகை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு டிஜிட்டல் கருவிகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த மதிப்புமிக்க படிப்பினைகளை வளரும் நாடுகளின் தலைவர்களுக்கு வழங்குகின்றன. பிரகதியின் வெற்றி, ஆளுகைக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் சக்தியை எடுத்துக்காட்டுகிறது, மற்ற நாடுகள் தங்கள் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு உதவும் வகையில் ஒரு செயல் திட்டத்தையும் வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080250
*******************
TS/BR/KV
(Release ID: 2080496)
Visitor Counter : 26