தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

கொன்யாக்: திரைக்கதை எழுத்தாளர்களின் ஆய்வக விருது பெற்று ஃபிலிம் பஜார் 2024-ல் பிரகாசித்தது.

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் நடத்திய ஃபிலிம் பஜார் 2024, புதிய தலைமுறை சினிமா படைப்பாளர்களைக் கொண்டாடியது. மதிப்புமிக்க திரைக்கதை எழுத்தாளர்களின் ஆய்வகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கொன்யாக் என்ற திரைப்படக்கதை பற்றிய அறிவிப்பு சிறப்பம்சங்களில் ஒன்றாகும். என்எஃப்டிசி திரைக்கதை எழுத்தாளர்கள் ஆய்வகம் 2024-ல் கொன்யாக் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. படத் திரைக்கதை திரைப்பட தயாரிப்பாளர்களின் ஆதரவுடன் ரூ. 100 கோடி செலவில் தயாரிக்கப்படக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தது.

உத்தவ் கோஷ் எழுதிய 'கொன்யாக்' திரைப்படம் பங்கஜ் குமார் இயக்கிய முதல் படம்.  இது நாகாலாந்தின் புராணக்கதைகள், சமூகம் மற்றும் நிலப்பரப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2079703

***

TS/PKV/AG/KR/DL

iffi reel

(Release ID: 2079902) Visitor Counter : 19