சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உலக எய்ட்ஸ் தினம் -இந்தூரில் நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தலைமை வகிக்கிறார்
Posted On:
30 NOV 2024 1:40PM by PIB Chennai
உலக எய்ட்ஸ் தினம் 2024-ஐ முன்னிட்டு, 2024 டிசம்பர் 01 அன்று மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, மத்தியப் பிரதேச மாநிலம் இந்நூலில் நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
டிசம்பர் 1 அன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு வகையில் ஹெச்ஐவி, எய்ட்ஸுக்கு எதிரான இந்தியாவின் முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
ஹெச்ஐவி / எய்ட்ஸ் மீதான ஐநா திட்டத்தின் கருப்பொருளான 'உரிமைகளை எடுத்துக்கொள்' என்ற கருப்பொருளுடன் இந்த உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஹெச்ஐவி / எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான பாகுபாட்டை அகற்றுவது, அவர்கள் சிகிச்சை பெறுவதற்கான உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறைகள், விழிப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக இந்தக் கருப்பொருள் அமைந்துள்ளது. மத்திய அரசின் சுகாதாரம் - குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) 1992-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதியன்று உலக எய்ட்ஸ் தினத்தை கடைபிடித்து வருகிறது. சமூகம், இளைஞர்கள், பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. 2030-ம் ஆண்டுக்குள் ஹெச்ஐவி / எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டுவரும் உலகளாவிய இலக்கை நோக்கமாகக் கொண்டு இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
*****
PLM/KV
(Release ID: 2079344)
Visitor Counter : 15