தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav
iffi banner

லித்துவேனியன் திரைப்படமான டாக்சிக் தங்கமயில் விருதை தட்டிச்சென்றது

கோவாவில் முடிவடைந்த 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2024-ல் மிகச்சிறந்த திரைப்படத்துக்கான தங்கமயில் விருதை லித்துவேனியன் திரைப்படமான டாக்சிக் பெற்றுள்ளது. 

இந்த விருதுக்கான ரூ.40 லட்சம் ரொக்கப்பணம், சான்றிதழ் மற்றும் தங்கமயில் கோப்பையைத் திரைப்படத்தின் இயக்குநர் சையூல் ப்லியூவைத்தே, தயாரிப்பாளர் ஜியட்ரே புரோகைத்தேவுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்தத் திரைப்படம்  கருணை மற்றும் ஆழ்ந்த உணர்வுத்திறனை எடுத்துக்காட்டுவதாக நடுவர்கள் பாராட்டினர்.

13 வயது மரிஜா என்னும் சிறுமியின் கதையை இந்தத்திரைப்படம் சொல்கிறது. தனது பாட்டியுடன் வசித்துவரும் மரிஜா எதிர்கொள்ளும் பிரச்சனைகளை திரைப்படம் அழகாக சித்தரிக்கிறது.

***

(Release ID: 2078767)

TS/PKV/AG/KR

iffi reel

(Release ID: 2078985) Visitor Counter : 37