ஊரக வளர்ச்சி அமைச்சகம்
இந்தியாவை உருமாற்றுதல் இந்தியர்களுக்கு அதிகாரமளித்தல்
நாகாலாந்தில் கண்கூடாகத் தெரியும் மாற்றம்
Posted On:
29 NOV 2024 11:15AM by PIB Chennai
நேர்மறையான மாற்றம், குறிப்பாக அது வாழ்க்கையை மாற்றும் போது, எப்போதும் வரவேற்கப்படுகிறது. இந்தியா தனது மக்களை பாதுகாப்பு, கண்ணியம், சிறந்த வாழ்க்கைத் தரத்தை நோக்கி வழிநடத்தி, குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்படுத்தி வருகிறது. இந்தியா போன்ற பரந்த, பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், தொலைதூரப் பகுதிகளை அடைவதில் வளர்ச்சி முயற்சிகள் அடிக்கடி சவால்களை எதிர்கொள்கின்றன. மாற்றத்தின் காற்று இப்போது ஒவ்வொரு மூலையிலும் வீசுகிறது, யாரும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்கிறது. மக்கள்நலத் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் இந்தியர்களை வளர்ச்சியடைந்த இந்தியாவின் கூட்டு முயற்சியில் ஒன்றிணைத்துள்ளன.
இந்த மாற்றத்தின் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் அம்சங்களில் ஒன்று, நிச்சயமற்ற தன்மையிலிருந்து நிலைத்தன்மைக்கு மாறுவது - குறிப்பாக வீட்டுவசதி. லட்சக் கணக்கான கிராமப்புற இந்தியர்களுக்கு, போதிய வீட்டுவசதி இல்லாதது ஒரு காலத்தில் கசப்பான எதார்த்தமாக இருந்தது. ஆனால் இன்று பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டம் வாழ்வில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் தங்குமிடம் தொடர்புடையது மட்டுமல்ல. பெருமை, பாதுகாப்பு மற்றும் நல்லுணர்வை வழங்கும் உறுதியான வீடுகளை வழங்குவதாகும்.
கட்டுமானப் பொருட்கள் மற்றும் புவியியல் சவால்களை எதிர்கொள்ளும் நாகாலாந்தின் தொலைதூர மலைப்பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களின் பலன் தெரிகிறது. இங்கு, பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டம் ஏற்கனவே 48,826 வீடுகள் கட்ட அனுமதித்துள்ளது. இதில் 19,300 வீடுகளுக்கு மேல் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் தங்குமிடத்திற்காக போராடிய குடும்பங்களின் வாழ்க்கையை இது மாற்றியுள்ளது. உறுதியான கல் தூண்கள் மற்றும் உயரமான கட்டமைப்புகளில் கட்டப்பட்ட இந்த வீடுகள், காலத்தின் சோதனையைத் தாங்குவது மட்டுமின்றி, நெகிழ்வுத் தன்மை மற்றும் புதுப்பித்தலையும் கொண்டுள்ளன. இதன் வடிவமைப்பானது ஈரப்பதம் மற்றும் கரையானால் ஏற்படும் சேதத்தை தடுப்பதோடு நீண்ட காலப் பயன்பாட்டையும் உறுதி செய்கிறது. இந்த வீடுகளுக்குள் அடியெடுத்து வைக்கும் குடும்பங்களுக்கு அது அதிகாரமளிக்கும் தருணமாக இருக்கிறது.
ஆனால் மாற்றம் ஒருவரின் தலைக்கு மேல் கூரையுடன் அதாவது வீட்டுடன் முடிவதில்லை. பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டம் அதன் செயல்பாடுகளில் உள்ளூர் பொருளாதாரங்களைப் பிணைப்பதன் மூலம் கிராமப்புற இந்தியா முழுவதும் பொருளாதார வலுவூட்டலை ஊக்குவித்துள்ளது. நாகாலாந்தில், மூங்கில் மற்றும் இலகுரக கான்கிரீட் போன்ற உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி கட்டுமானச் செலவைப் பயனாளிகள் குறைக்கும் அதே வேளையில் திறன் மற்றும் தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்புகின்றனர்.
பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டம் பாரம்பரியத்திற்கும் நவீனத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் நாகாலாந்தில் கட்டப்பட்ட வீடுகள் இப்பகுதியின் கட்டிடக்கலை பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றன. நவீன அம்சங்கள் இயற்கை தன்மையுடன் தடையின்றி கலக்கின்றன. மூங்கில் பாய்கள், சுவர்களையும் கூரைகளையும் அலங்கரிக்கின்றன. பாரம்பரியத்தை செயல்பாட்டுடன் இணைக்கின்றன.
பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டம் என்பது வாழ்க்கையை மாற்றுவது அதன் மூலம் இந்தியாவையே மாற்றுவதாகும். பாதுகாப்பான வீடுகளுடன், கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் கவனம் செலுத்த குடும்பங்கள் சுதந்திரமாக உள்ளன. இது தலைமுறை முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது. நாகாலாந்தில், இந்த மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. தங்கள் புதிய வீடுகளுக்குள் காலடி எடுத்து வைக்கும் குடும்பங்கள் ஒளிமயமான எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் உள்ளன.இதுவே மாறிவரும் இந்தியாவின் உயிர்ப்பாகும். இங்கு ஒவ்வொரு குடிமகனும் வளர்ச்சியில் பங்குதாரராக உள்ளனர். ஒவ்வொரு கனவுக்கும் ஒரு அடித்தளம் உள்ளது.
***
(Release ID: 2078847)
TS/SMB/RR/KR
(Release ID: 2078968)
Visitor Counter : 18