பாதுகாப்பு அமைச்சகம்
நடைபெறவுள்ள விமான சாகசம்-2025 நிகழ்ச்சிக்கு ஊடகங்களுக்கான பதிவு தொடக்கம்
Posted On:
29 NOV 2024 11:30AM by PIB Chennai
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எலகங்கா விமானப்படை தளத்தில் 15-வது ஏரோ இந்தியா 2025 விமான சாகச நிகழ்ச்சி அடுத்த ஆண்டு பிப்ரவரி 10-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கண்கவர் விமான சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க ஊடகப் பிரதிநிதிகளுக்கான பதிவு தொடங்கி உள்ளது. ஆன்-லைன் மூலம் ஊடகவியலாளர் பதிவு செய்து கொள்ளலாம். www.aeroindia.gov.in என்ற இணையதளத்தில் ஊடகப் பதிவிற்காகவே பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ள https://www.aeroindia.gov.in/registration/media-authentication-
form என்ற பிரிவின் மூலம் பதிவு செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த ஊடகப் பிரதிநிதிகள் இந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு வருகை தருவதற்கு ‘J’ விசா வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவு அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய பின்வரும் ஆவணங்கள் அவசியமாகிறது.
1. செல்லத்தக்க ஊடக அடையாள அட்டை எண், பத்திரிகை தகவல் அலுவலகம் அல்லது மாநில பத்திரிகையாளர் அட்டை எண் அல்லது புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் அரசு வழங்கிய அடையாள அட்டை எண்
2. சுய புகைப்படம்
5 நாள் நடைபெறும் இந்த விமான சாகச நிகழ்ச்சியில் முதல் 3 நாட்களுக்கு விமான வர்த்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் பாதுகாப்புத் துறையில் இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்படும் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் 27-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 809-க்கும் கூடுதலான பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
***
(Release ID: 2078858)
TS/SV/RR/KR
(Release ID: 2078967)
Visitor Counter : 15