பாதுகாப்பு அமைச்சகம்
கப்பல் என்ஜினுக்கான மின்சார உந்து விசை அமைப்பின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும்- இங்கிலாந்தும் கையெழுத்திட்டுள்ளன
प्रविष्टि तिथि:
29 NOV 2024 11:22AM by PIB Chennai
கப்பல் என்ஜினுக்கான மின்சார உந்து விசை அமைப்பின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் கையெழுத்திட்டுள்ளன. இம்மாதம் 28-ந் தேதி இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ்மோத் துறைமுகத்தில் நடைபெற்ற இரு நாடுகளின் பணிக்குழுக் கூட்டத்திற்கு பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் நவீன தொழிற்நுட்பத்தின் அடிப்படையில் உள்நாட்டிலேயே மின்சார இன்ஜின்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.
எதிர்காலத்தில் கடற்படைக்கு தேவையான கப்பல்களை வடிவமைப்பதில் மின்சாரத்தில் இயங்கும் இன்ஜின்களை தயாரிக்கவும், அதன் வடிவமைப்பு, உருவாக்கம் போன்ற பணிகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
***
(Release ID: 2078853)
TS/SV/RR/KR
(रिलीज़ आईडी: 2078954)
आगंतुक पटल : 118