தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
'ஆடுஜீவிதம்' திரைப்படம் உயிர் பிழைத்தல் மற்றும் நம்பிக்கையின் எழுச்சியூட்டும் வரலாறு; ஐ.எஃப்.எஃப்.ஐ-இல் கிடைத்த பெரும் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்: இயக்குநர் பிளெஸ்ஸி
ஒன்று, கேரள கிராமத்தின் எளிய வாழ்க்கையிலிருந்து தொலைதூர நாட்டில் அடிமைத்தனத்தின் போராட்டங்களைத் தாங்கிக்கொண்ட மாற்றத்தை விளக்கும் நெகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் ஊக்கமளிக்கும் கதை. மற்றொன்று, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் காலநிலை தாக்கம் காரணமாக சமகால தம்பதிகளை பாதிக்கும் கருவுறாமை குறித்த சமூக அக்கறையை ஆராயும் கதை. கோவாவில் நடைபெற்ற 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐ.எஃப்.எஃப்.ஐ) இரண்டு குறிப்பிடத்தக்க மலையாள படங்களான ஆடுஜீவிதம் மற்றும் தானுப், பார்வையாளர்களைக் கவர்ந்தன.
பத்திரிகையாளர் சந்திப்பில், இரண்டு படங்களின் நடிகர்கள் மற்றும் படக் குழுவினர் ஊடகங்களிடையே உரையாற்றினர், படைப்பு செயல்முறை மற்றும் அவர்களின் படைப்புகளில் ஆராயப்பட்ட ஆழமான கருப்பொருள்கள் பற்றிய நுண்ணறிவுத் திறன்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ஆடுஜீவிதம்: எ ஸ்டோரி ஆஃப் சர்வைவல் அண்ட் ஹோப்
புகழ்பெற்ற இயக்குநர் பிளெஸ்ஸியின் படைப்பான ஆடுஜீவிதம், பென்யமின் எழுதி, அதிகம் விற்பனையான நாவலை அடிப்படையாகவும் உயிர் பிழைத்தலை மையமாகவும் கொண்ட ஒரு கதையாகும். மத்திய கிழக்கில் நல்ல வாழ்க்கையைத் தேடி தனது குடும்பத்தை கேரளாவில் விட்டுச் செல்லும் நஜிப்பை கதை பின்தொடர்கிறது. ஆனால் அவர் ஒரு ஆட்டுப் பண்ணையில் அடிமையாக இருக்கிறார். தனது அடையாளத்தை இழந்த நஜிப், தனது உயிரைக் காக்க அனைத்து முரண்பாடுகளையும் எதிர்த்துப் போராடுகிறார், பண்ணையில் ஆடுகள் மற்றும் ஒட்டகங்களுடன் அவர் உருவாக்கும் பிணைப்புகளில் ஆறுதல் காண்கிறார்.
பிளெஸ்ஸி தனது உரையில், கற்பனை செய்ய முடியாத கஷ்டங்களைத் தாங்கும் நஜிப்பின் கதை எவ்வாறு பலரும் எதிர்கொள்ளும் போராட்டங்களின் பிரதிபலிப்பாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டினார். ஐ.எஃப்.எஃப்.ஐ.யில் படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்புக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார், இது உயிர்பிழைத்தல் சார்ந்த கதை மட்டுமல்ல, நம்பிக்கையின் கதையும் கூட என்று கூறினார்.
தனுப்: கருவுறாமை மற்றும் சமூக களங்கம் பற்றிய ஒரு ஆய்வு
ராகேஷ் நாராயணன் இயக்கிய தனுப், மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் நவீன தம்பதிகளிடையே அதிகரித்து வரும் பொதுவான கவலையான கருவுறாமை பிரச்சினையை ஆராய்கிறது. ஒரு அழகிய கிராமத்தில் வசிக்கும் இளம் தம்பதியரான பிரதீஷ் மற்றும் ட்ரீசா ஆகியோரின் போராட்டங்களை இந்த படம் ஆராய்கிறது. அவர்களின் கருவுறாமை பற்றிய பதில்களுக்கான அவர்களின் தேடல், வதந்திகள், தீர்ப்பு மற்றும் அவர்கள் வாழும் சமூகத்தால் அவர்களின் தனியுரிமை மீதான படையெடுப்பு ஆகியவற்றால் மேலும் சிக்கலானது.
பெரும்பாலும் மறைக்கப்படும் ஒரு சமூகப் பிரச்சினையை துணிச்சலுடன் இந்தப் படம் பேசுகிறது என்று ஆசிரியர் சப்தர் மெர்வா விளக்கினார். "கருவுறாமை என்பது பல தம்பதிகள் எதிர்கொள்ளும் ஆழமான தனிப்பட்ட மற்றும் உணர்திறன் வாய்ந்த பிரச்சினை. தனுப்பில், இந்த யதார்த்தத்தை நாங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதை விளக்குகிறது. இது ஒரு கதை மட்டுமல்ல, பச்சாத்தாபம் மற்றும் புரிதலுக்கான அழைப்பு" என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078625
***
(Release ID: 2078625)
TS/BR/KR
(Release ID: 2078875)
Visitor Counter : 35