தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
'பி ஃபார் பாப்பராசி', ‘பாஹி – ட்ரேசிங் மை ஆன்செஸ்டர்ஸ்’ படக் குழுவினரின் ஊடக சந்திப்பு நிகழ்ச்சி- கோவா இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடைபெற்றது
‘பி ஃபார் பாப்பராசி’, ‘பாஹி – ட்ரேசிங் மை ஆன்செஸ்டர்ஸ்’ ஆகிய படங்களின் படக் குழுவினர் கோவாவில் நடைபெற்று வரும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ‘பி ஃபார் பாப்பராசி’ படத்தின் இயக்குநர் திவ்யா ஹேமந்த் கர்னாரே, பாப்பராசிகள் எனப்படும் புகைப்படக் கலைஞர்களின் வாழ்க்கை வாழ்க்கையை சுற்றி சுழலும் ஆர்வம் கொண்ட நபர் தான் என்று கூறினார். "மற்றவர்களின் வாழ்க்கையை எட்டிப்பார்க்கும் மனிதர்களின் வாழ்க்கையை எட்டிப்பார்க்க நான் ஆர்வமாக இருந்தேன் என்று அவர் தெரிவித்தார். கேமரா அவர்கள் பக்கம் திரும்பும்போது அவர்களுக்கு என்ன நடக்கும் என்று இயக்குனர் கூறினார்.
ஊடகவியலாளர்களுடனான தமது உரையாடலின் போது, 'பாஹி - ட்ரேசிங் மை ஆன்செஸ்டர்ஸ்' படத்தின் இயக்குனர் ரசிதா கோரோவாலா, ஹரித்வாரில் உள்ள தீர்த்த புரோஹிட்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமான மத குருமார்களின் வாழ்க்கைப் பதிவுகளை படம் விளக்குகிறது என்று கூறினார். ஹரித்வாரின் வளமான கலாச்சார, ஆன்மீக பாரம்பரியத்தின் விரிவான, ஆழமான ஆய்விலிருந்து கதை பிறந்தது என்று அவர் தெரிவித்தார்.
*************
(Release ID: 2078207)