தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 9

தேர்வு நடைமுறை தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்கு அப்பாற்பட்டது; உணர்ச்சி பிரதிபலிப்பு, அசல் தன்மை மற்றும் படைப்பாற்றலில் கவனம் செலுத்துகிறது: சர்வதேச நடுவர் குழுத் தலைவர் அசுதோஷ் கோவரிகர்

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) 2024-ல் சர்வதேச போட்டி பிரிவுக்கான நடுவர் குழு, இன்று கோவாவில் செய்தியாளர்களை சந்தித்தது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் (ஆண்), சிறந்த நடிகர் (பெண்), சிறப்பு ஜூரி பரிசு உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளில் வெற்றியாளர்களைத் தீர்மானிக்க இந்த ஆண்டு, மதிப்புமிக்க தங்க மயில் நடுவர் குழுவை விழா ஏற்பாட்டாளர்கள் அமைத்துள்ளனர். புகழ்பெற்ற இந்திய திரைப்பட தயாரிப்பாளர் அஷுதோஷ் கோவரிகர் தலைமையிலான நடுவர் குழுவில், சர்வதேச சினிமா நிபுணர்களின் புகழ்பெற்ற குழு உள்ளது.

நடுவர் குழுவில் பின்வரும் உறுப்பினர்கள் உள்ளனர்:

விழாவின் தங்க மயில் விருது வென்றவருக்கு ரூ.40 லட்சம் பரிசு மற்றும் விழாவின் சிறந்த கௌரவங்களில் ஒன்று வழங்கப்படும். பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம் மற்றும் சினிமா கலைத்திறனை பிரதிபலிக்கும் இந்த மதிப்புமிக்க போட்டிக்கு மொத்தம் 15 படங்கள் (12 சர்வதேச மற்றும் 3 இந்திய திரைப்படங்களின் கலவை) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

நடுவர் குழுவின் தலைவர் அசுதோஷ் கோவரிகர், கோவாவின் துடிப்பான சூழல் மற்றும் திருவிழாவை நெருக்கமாக அனுபவிக்கும் வாய்ப்பு குறித்த தமது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். நடுவர் குழு உறுப்பினர்களிடையே உள்ள தனித்துவமான தோழமையை அவர் எடுத்துரைத்தார். திரைப்படங்களில் அவர்களின் பகிரப்பட்ட ரசனையைக் குறிப்பிட்டார். தேர்வு செயல்முறை, தொழில்நுட்ப நிபுணத்துவத்தைத் தாண்டி, உணர்ச்சி பிரதிபலிப்பு, அசல் தன்மை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது என்று அவர் விளக்கினார். சிறந்த திரைப்படங்கள் புதிய கண்ணோட்டங்களை வழங்குகின்றன, பார்வையாளர்கள் பல்வேறு கலாச்சாரங்களுடன் ஈடுபடுவதன் மூலம் கற்றுக்கொள்ளவும் வளரவும் உதவுகின்றன என்று கோவரிகர் வலியுறுத்தினார்.

55 வது சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமிக்க தங்க மயில் விருதுக்கு கீழ்க்கண்ட படங்கள் போட்டியிடுகின்றன:

1. பயம் மற்றும் நடுக்கம் (Tars o Larz) - இயக்கியவர்கள் Manijeh Hekmat, Faeze Azizkhani

2. குலிசார் (குலிசார்) - பெல்கிஸ் பைராக் இயக்கியுள்ளார்

3. புனித பசு (Vingt Dieux) - இயக்கம் Louise Courvoisier

4. நான் நெவென்கா (சோய் நெவென்கா) - Icíar Bollaín இயக்கியுள்ளார்

5. பானோப்டிகான் (பானோப்டிகோனி) - ஜார்ஜ் சிகாருலிட்ஜே இயக்கியது

6. பியர்ஸ் (Cì xīn qiè gŭ) - நெலிசியா லோவால் இயக்கப்பட்டது

7. ரெட் பாத் (Les Enfants Rouges) - Lotfi Achour இயக்கியுள்ளார்

8. ஷெப்பர்ட்ஸ் (பெர்கர்ஸ்) - சோஃபி டெராஸ்பே இயக்கியுள்ளார்

9. ஒருபோதும் வராத புத்தாண்டு (Anul nou care na fost) - இயக்கியவர் போக்டன் முரேசானு

10. நச்சு (Akiplėša) - இயக்கியவர் Saulė Bliuvaitė

11. அலைகள் (VLNY) - இயக்கியவர் Jiří Mádl

12. ஹூ டூ ஐ ஆர்ம் டு (Mé el Aïn) - இயக்கம் Meryam Joobeur

13. பிரிவு 370 (பிரிவு 370) - ஆதித்யா சுஹாஸ் ஜம்பலே இயக்கியுள்ளார்

14. ராவ்சாஹேப் (ராவ்சாஹேப்) - நிகில் மகாஜன் இயக்கம்

15. ஆடு வாழ்க்கை (ஆடுஜீவிதம்) - பிளெஸ்ஸி இயக்கம்

உலகெங்கிலும் உள்ள மாறுபட்ட கண்ணோட்டங்களை பிரதிபலிக்கும் தனித்துவமான கலை பார்வை, கலாச்சார பொருத்தம் மற்றும் உணர்ச்சிப்பெருக்கு ஆகியவற்றிற்காக திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077958

***

MM/RS/DL

iffi reel

(Release ID: 2078115) Visitor Counter : 3