தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
'மஞ்சும்மல் பாய்ஸ்: நட்பு மற்றும் துணிச்சலின் உண்மைக் கதை' 55 வது சர்வதேச திரைப்பட விழாவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது
55வது சர்வதேச திரைப்பட விழாவின் (ஐ.எஃப்.எஃப்.ஐ) இந்தியன் பனோரமா பிரிவில் வசீகரிக்கும் மலையாள நாடகமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் திரையிடப்பட்டது. கோவாவில் உள்ள மத்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இத்திரைப்படத்தின் இயக்குனர் திரு சிதம்பரம் கலந்துரையாடினார்.
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள மஞ்சும்மல் என்ற கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் கொண்ட மலையாள இளைஞர் குழு சம்பந்தப்பட்ட நிஜ வாழ்க்கை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தமிழ்நாட்டின் கொடைக்கானலில் அமைந்துள்ள குணா குகைகள் என்றும் அழைக்கப்படும் டெவில்ஸ் கிச்சனை பார்வையிட்டனர். கமல்ஹாசனின் குணா திரைப்படத்தின் படப்பிடிப்புக்குப் பிறகு இந்த குகைகள் புகழ் பெற்றன. இளைஞர் குழுவைச் சேர்ந்த ஒருவர் தற்செயலாக குகைக்குள் உள்ள ஆழமான குழியில் தவறி விழுந்தார். உள்ளூர் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் மீட்பு நடவடிக்கை மீது நம்பிக்கை இழந்த நிலையில், அந்த இளைஞர் குழுவைச்சேர்ந்த சிஜு டேவிட் தனது நண்பரை மீட்க துணிச்சலான மற்றும் சாகசப் பணியை மேற்கொண்டார். நட்பு மற்றும் சுயநலமற்ற செயலின் வலிமையை எடுத்துக்காட்டும் வகையில் நிகழ்ந்த இந்த சம்பவம், மஞ்சுமெல் கிராமத்தைச் சேர்ந்த பதினோரு இளைஞர்களின் துணிச்சலுக்கு சான்றாக அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076902
***
TS/VS/KV/RR
(Release ID: 2077093)