கலாசாரத்துறை அமைச்சகம்
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டை நினைவுகூரும் வரலாற்று சிறப்புமிக்க ஓராண்டு கொண்டாட்டம் நாளை தொடங்குகிறது
Posted On:
25 NOV 2024 4:41PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டை நினைவுகூரும் வகையில், வரலாற்று சிறப்புமிக்க ஓராண்டு கொண்டாட்டத்தின் தொடக்கத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது நமது ஜனநாயகத்தின் குறிப்பிடத்தக்க பயணத்தையும், நமது அடிப்படைக் கொள்கைகள் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களின் நீடித்த பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் ஒரு மைல்கல் ஆகும். அரசியலமைப்பு தினமான 2024 நவம்பர் 26 அன்று தொடங்குகிறது. இந்த கொண்டாட்டங்கள் நமது அரசியலமைப்பு, நமது கௌரவம் (ஹமாரா சம்விதான், ஹமாரா ஸ்வாபிமான்) என்ற பிரச்சார முழக்கத்துடன் நடத்தப்படுகின்றன, மேலும் அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் பங்களிப்புகளை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் அதில் இடம் பெற்றுள்ள முக்கிய மதிப்புகளை மீண்டும் வலியுறுத்துகின்றன.
1949 நவம்பர் 26 அன்று, இந்திய அரசியலமைப்பு சபை இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. இது 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இது இந்திய வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பின் அடிப்படையான உலகின் மிக நீளமாக எழுதப்பட்ட அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் வகையில் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது .அரசியலமைப்பு அதன் தொடக்கத்திலிருந்து, கடந்த 75 ஆண்டுகளில் நாட்டின் முன்னேற்றத்தை வடிவமைக்கும் வழிகாட்டு கட்டமைப்பாக செயல்படுகிறது.
கொண்டாட்டம் - சிறப்பம்சங்கள்
சிறப்பு இணையதளம் (constitution75.com) கலந்துரையாடல் நிகழ்வுகள் கள் மற்றும் வளங்கள் மூலம், அரசியலமைப்பின் பாரம்பரியத்துடன் மக்கள் பணியாற்றுவதற்கு உதவும் வகையில் ஒரு பிரத்யேக இணையதளம், constitution75.com உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் இடம் பெற்றுள்ள முன்னுரையைப் படித்து வீடியோவைப் பதிவு செய்யுங்கள். மக்கள் தங்களுக்கு விருப்பமான மொழிகளில் அரசியலமைப்பின் முகவுரையைப் படிக்கும்போது, வீடியோக்களைப் பதிவு செய்வதன் மூலம் பிரச்சாரத்தில் பங்கேற்கலாம். வீடியோக்களை பிரச்சார இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் மற்றும் பங்கேற்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.
அரசியலமைப்பை பல மொழிகளில் ஆராயுங்கள் அரசியலமைப்பின் முழு உரையையும் பல மொழிகளில் அணுகவும் அனைத்து மக்களும் அணுகக்கூடியதாக இருக்கும்.
அரசியலமைப்பை உருவாக்குவது பற்றி அறிக, அரசியலமைப்பு சபையின் விவாதங்கள், அரசியலமைப்பை உருவாக்குவதில் ஈடுபட்ட பல்வேறு குழுக்களின் அறிக்கைகள் மற்றும் நவீன இந்தியாவை வடிவமைத்த நன்மதிப்புகள் மற்றும் கொள்கைகள் பற்றிய ஆழமான அறிவைப் பெறுங்கள்.
உள்உறவாடல் அம்சங்கள் உங்கள் அரசியலமைப்பை அறிந்து கொள்ளுங்கள், ஒரு செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட கலந்துரையாடும் அம்சம், அங்கு ஒருவர் அரசியலமைப்பைப் பற்றிய கேள்விகளைக் கேட்டு இந்திய அரசியலமைப்பு தொடர்பான விரிவான பதில்களைப் பெறலாம்.
நவம்பர் 26, 2024 அன்று முன்னுரையின் வெகுஜன வாசிப்பு
2024 நவம்பர் 26 அன்று, பள்ளிகள் முதல் அலுவலகங்கள் வரை, நகரங்கள் முதல் கிராமங்கள் வரை, இந்தியா முழுவதும் கோடிக் கணக்கானவர்கள் ஒன்றாக முன்னுரையைப் படிப்பார்கள்.
உங்கள் செல்ஃபிக்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் (constitution75.com) பதிவேற்றி சமூக ஊடகங்களில் பெருமையுடன் பகிர்வதன் மூலம் இத்தருணத்தை கொண்டாடலாம்.
2024 நவம்பர் 26-ம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் தொடக்க நிகழ்ச்சி
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசு துணைத்தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர் மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில் பிரமாண்டமான தொடக்க நிகழ்ச்சி நடைபெறும்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்
இந்திய அரசியலமைப்பின் பெருமை, அதன் உருவாக்கம் மற்றும் வரலாற்றுப் பயணம் ஆகியவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்ட குறும்பட விளக்கக்காட்சி.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிடப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குதல் ஒரு பார்வை மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குதல் மற்றும் அதன் மகத்தான பயணம் ஆகிய தலைப்புகளில் புத்தகங்கள் வெளியீடு
இந்திய அரசியலமைப்பின் கலைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கையேட்டை வெளியிடுதல்.
சமஸ்கிருதத்தில் இந்திய அரசியலமைப்பு வெளியீடு.
மைதிலியில் இந்திய அரசியலமைப்பு வெளியீடு.
குடியரசுத்தலைவர் தலைமையில் முகவுரை வாசிப்பு சம்பிரதாய முறைப்படி வாசிப்பு.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் பங்கேற்குமாறும், நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நமது கூட்டுப் பெருமிதத்தைக் காட்டுமாறும், நமது தேசத்தை வரையறுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கான நமது உறுதிப்பாட்டை நிரூபிக்குமாறும் மத்திய அரசு குடிமக்களை கேட்டுக் கொள்கிறது.
எப்படி பங்கேற்பது!
அரசியலமைப்பின் முன்னுரையைப் படிக்கவும், உங்கள் வீடியோக்களைப் பதிவுசெய்து பதிவேற்றவும், பங்கேற்பு சான்றிதழைப் பதிவிறக்கவும் constitution75.com-ஐ பார்வையிடவும்.
இணையதளத்தின் உள்உறவாடல் அம்சங்களில் பங்கு பெறுவீர். பல மொழிகளில் அரசியலமைப்பை ஆராயுங்கள், இந்தியாவுக்கு வழிகாட்டும் கட்டமைப்பைக் கொண்டு வந்த பயணத்தைப் பற்றி மேலும் அறியவும்.
நாடு தழுவிய இயக்கத்தில் சேருங்கள் 2024 நவம்பர் 26 அன்று, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பஞ்சாயத்துகள் மற்றும் பிறவற்றில் முகவுரை வாசிப்பில் பங்கேற்கவும். மற்றவர்களை ஊக்குவிக்க சமூக ஊடகங்களில் உங்கள் பங்கேற்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
---
TS/MM/KPG/RR/DL
(Release ID: 2077019)
Visitor Counter : 38